(Letter) அதிகரித்துவரும் காத்தான்குடி வீதி விபத்துகள் தொடர்பில் கவனமெடுங்கள்

0
718

காத்தான்குடி பிரதான வீதியில் அதிகரித்துவரும் விபத்துகள் தொடர்பாக காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிருவனங்கள் சம்மேளனத்தினால் மட்டக்களப்பு வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு அனுப்பப்பட்ட கடிதம்

01.03.2016

மாகாணப் பணிப்பாளர்,
வீதி அபிவிருத்தி அதிகார சபை,
மட்டக்களப்பு.

ஐயா!

காத்தான்குடி பிரதான வீதியில் ஏற்படும் அதிகரித்த விபத்துகள் தொடர்பாக…

காத்தான்குடி நகரம் மக்கள் மிக அதிகமாக செறிந்து வாழும் ஒரு நகரமாகும். மக்கள் தங்கள் அன்றாட தேவைகள் முழுவதுக்குமாக இப்பிரதான வீதியையே பயன்படுத்துகின்றனர். இந்நகரத்தின் கிழக்கு மற்றும் மேற்குப் பக்கமாக வாழும் அனைத்து மக்களும் இப்பிரதான வீதியையே பயன்படுத்துகின்றனர்.

அதுமாத்திரமன்றி, இப்பிரதேசத்தனை ஊடறுத்து நாளொன்றுக்கு பல்லாயிரக்கனக்கான மக்கள் பிரயாணம் செய்கின்றனர். மேலும் நூற்றுக்கணக்கான வாகனங்களும் இவ்வீதியினூடா பயணிக்கின்றன.

இந்நிலையில், அண்மைக்காலமாக இப்பிரதான வீதியில் விபத்துகள் அதிகரித்து, பல உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளதை நாம் அவதானிக்கின்றோம்.

இதற்கு பிரதான காரணமாக பாதை ஒழுங்கமைப்பு, பாதசாரிகளின் கவனயீனம், ஓட்டுனர்களின் அதிக வேகம் மற்றும் கனவக்குறைவு, போக்குவரத்துப் பொலிஸார் தங்கள் கடமையினை சரியான முறையில் நிறைவேற்றாமை போன்ற காரணங்களைக் குறிப்பிடலாம்.

இந்தவகையில், வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் காத்தான்குடி பிரதேசத்தில் உடனடியாக மேற்கொள்ளப்பட வேண்டிய மிக முக்கிய விடயங்களை இங்கு சுட்டிக்காட்ட விரும்புவதோடு, உடனடி நடவடிக்கை எடுக்குமாறும் தயவுடன் கெட்டுக்கொள்கிறோம்.

01. மக்கள் மிக அதிகமாக வீதியைக் கடக்கும் இடங்களில் பாதசாரிகளுக்கான மஞ்சற்கோடுகளை அமைத்தல்

02. ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ள மஞ்சற்கோடுகள் அழிந்த நிலையில் காணப்படுவதனால் அவைகளை சீர்செய்தல்.

03. மிக முக்கியமான சந்திகளில் வீதி சமிக்ஞை விளக்குகளை அமைத்தல்

04. ‘U Turn’ அமைந்துள்ள இடங்களில் வாக சாரதிகளுக்கு தடையாகவுள்ள பூமரங்களை ஒழுங்குபடுத்துதல்.

05. ‘U Turn’ மறுகின்ற இடங்களில் அதனை சுட்டிக்காட்டும் பதாதைகளை அமைத்தல்.

06. பிரதான வீதிகளில் வாகன தரிப்பிடத்துக்கான ஒற்றை, இரட்டை நாட்களுக்கான விளம்பரத்தை இடுதல்.

நன்றி
இவ்வண்ணம்

பிரதித் தலைவர் – அல்ஹாஜ். ஏ.எல். அப்துல் ஜவாத் BA, LLB
செயலாளர்
அஷ்ஷெய்க். ஏ.எல்.எம். சபீல் (நளீமி) BA

LEAVE A REPLY