ஆசிய கிண்ண கிரிக்கெட்: இறுதிப்போட்டியில் இந்தியா-வங்காளதேசம் மோதல்

0
107

ஆசிய கிண்ண 20 ஓவர் கிரிக்கெட் போட்டி வங்காளதேசத்தில் நடைபெற்று வருகிறது.

இதில் இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், வங்காள தேசம், ஐக்கிய அரபு எமி ரேட்ஸ் ஆகிய 5 அணிகள் பங்கேற்றன.ஒவ்வொரு அணியும், மற்ற அணிகளுடன் தலா 1 முறை மோத வேண்டும். புள்ளிகள் அடிப்படையில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும்.

இந்திய அணி தான் மோதிய 3 ஆட்டங்களிலும் வென்று ஏற்கனவே இறுதிப் போட்டிக்கு முன்னேறி இருந்தது.நேற்று நடந்த 8–வது ‘லீக்’ ஆட்டத்தில் பாகிஸ்தானை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வங்காளதேசம் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.

வங்காளதேச அணி ஏற்கனவே இலங்கையை அணியை அதிர்ச்சிகரமாக தோற்கடித்து இருந்தது. தற்போது பாகிஸ்தானுக்கு அந்த அணி அதிர்ச்சி கொடுத்துள்ளது.ஆசிய கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியா–வங்காளதேச அணிகள் வருகிற 6–ந்தேதி மோதுகின்றன.முன்னணி அணிகளான இலங்கை, பாகிஸ்தான் வெளியேற்றப்பட்டன. அந்த அணிகள் நாளை மோதும் கடைசி ‘லீக்’ ஆட்டத்தால் எந்த பலனும் இருக்காது. சம்பிரதாய ஆட்டமாகவே இருக்கும்.

LEAVE A REPLY