இருதய நோய் பற்றிய தகவல்கள்

0
659

இன்று உலகளாவிய ரீதியில் மரணங்களை ஏற்படுத்தும் முதன்மைக் காரணியாக இருதய நோய் திகழ்கிறது. ஆண்டுதோறும் இந்நோயால் 17.2 மில்லியன் மக்கள் மரணமடைகின்றனர்.

ஒரு காலத்தில் பணக்காரர்களின் நோய் எனக் கருதப்பட்ட இந்நோய் இன்று வறியவர்களையும் பாதித்துள்ளது. முன்பு முதியோரையே தாக்கிய இந்நோய் இன்று சிறுவர்களையும், இளம் வயதினரையும் பாதித்துள்ளது.

உலகளாவிய ரீதியில் ஏற்படும் மர ணங்கள் 75 சதவீதம் இருதய நோயால் ஏற்படுகிறது. ஒவ்வொரு வினாடியும் ஒன்றுக்கு மேற்பட்டோர் இந்நோயால் மரணமடைகின்றனர்.

2020 ஆம் ஆண்டளவில் இந்நோய் ஒரு கொள்ளை நோயாகப் பரிமாணமடையும் அபாயம் உள்ளதென மருத்துவ ஆய்வுகள் மூலம் தெரிய வந்துள்ளது. நவீனகால வாழ்க்கை முறை, உணவுமுறை, சூழல் மாசு அடைந்தமை, நீண்ட நேரம் கணினி மற்றும் தொலைக்காட்சிப் பெட்டியின் முன் இருத்தல், கையடக்கத் தொலைபேசி பாவனை, போதிய உடற்பயிற்சியின்மை ஓய்வின்மை, மன உளைச்சல் போன்றவையே இதற்குக் காரணமாகும்.

இருதயம் சீராகச் செயலாற்ற பிராண வாயு இரத்தம் மூலம் எடுத்துச் செல்லப்படுகிறது. இருதயத்திற்கு இரத்தத்தை எடுத்துச் செல்லும் முடிவுறு நாடிகளில் (Coronary Arteries) அடைப்பு ஏற்பட்டு இரத்தோட்டம் தடைப்படும்போது போதிய பிராணவாயு இருதயத்தின் தசைகளுக்குக் கிடைக்காதபோது தான் மார்பு வலி (Angina) ஏற்படுகிறது.

இது இருதய இரத்த குழாய்களில் அடைப்பு ஏற்பட்டுள்ளது என்ற எச்சரிக்கையாகும். இக்குழாய்கள் அடைபட்டு இருதயத்திற்கான இரத்தோட்டம் முழுமையாகத் தடைப்படும் போதுதான் மாரடைப்பு (Heart Attack) ஏற்படுகிறது.

பல்வேறு காரணிகளால் மேற்படி முடிவுறுநாடிகளில் கொழுப்பு படிந்து தடித்து விடுவதால் அவற்றின் விட்டம் குறைந்து விடுகிறது. இதனால் அதனூடாகச் செல்லும் இரத்தோட்டம் பாதிக்கப்படுகிறது. போதிய பிராணவாயு கிடைக்காததால் மார்புவலி ஏற்படுகிறது.

சிலவேலைகளில் இக்கொழுப்புப் படிவம் இரத்தக் குழாயிலிருந்து விடுபட்டு இரத்தத்துடன் கலந்து மிக மெல்லிய முடிவுறு நாடிகளுக்குள் புகுந்து அடைப்பை ஏற்படுத்திவிடுகிறது. இதனால் இருதயத்திற்குச் செல்லும் இரத்தோட்டம் பூரணமாகத் தடைப்படுவதால் மாரடைப்பு ஏற்படுகிறது.

மேற்படி இரத்தக் குழாய்களில் கொழுப்பு படிந்து தடிப்பு ஏற்படுதல் தடுக்க முடியாத மற்றும் தடுக்கக் கூடிய இருவகைக் காரணிகளால் நடைபெறுகிறது. முதுமை, ஆண்பால், பரம்பரை, கறுப்பு இனம் போன்றவை தடுக்க முடியாத காரணிகளாகும்.

சீரற்ற வாழ்க்கை முறை, தவறான உணவுப் பழக்க வழக்கம், போதிய ஒட்சிசனெதிரி கள்(Antioxidants) அடங்கிய உணவை உட்கொள்ளாமை, மன உளைச்சல், உடற் பயிற்சியின்மை, உயர் இரத்த அழுத்தம், இரத்தத்தில் உயர்ந்த அளவு கொழுப்பு (Cholesterol) மற்றும் ரைகிளிசெனரட் (Triclycexide)என்ற கொழுப்பு, குறைந்த அளவு நல்ல கொழுப்பு (HDL) , கூடிய அளவு கெட்ட கொழுப்பு (LDL) நீரிழிவு நோய், உடல் பருமன் எரிந்து விழுதல், தனிமை, பகமை, பேராசை, புகைத் தல், அதிக அளவு மதுப்பாவனை, நீண்டகால மருந்து பாவனை போன்றவை தடுக்கக்கூடிய காரணிகளாகும்.

இவற்றில் மிக முக்கியமானது உயர் இரத்த அழுத்தமாகும். தற்போது உலகளாவிய ரீதியில் ஒரு பில்லியனுக்கு மேற்பட்டோரை இந்த உயர் இரத்த அழுத்தம் நோய், பாதித்து ள்ளது. இந்நோய் தங்களிடம் இருப்பது பற்றி தெரியாமல் பெரும்பாலானோர் வாழ்கின்றனர். இதனால்தான் திடீரென எவ்வித அறிகுறிகளுமின்றி மாரடைப்பு ஏற்பட்டுப் பலர் மரண மடையும் பரிதாபகரமான நிலை ஏற்படுகிறது.

மேலும், சிலர் மேற்படி தடுக்கக்கூடிய காரணிகளைக் கிரமமான பரிசோதனைகளை மேற்கொண்டு கட்டுப்பாட்டில் வைத்து தங்களுக்கு இரு தய நோய் ஏற்பட வாய்ப்பு இல்லை என இருக்கும்போது அவர்களுக்கு எவ்வித அறிகுறிகளுமின்றி மாரடைப்பு ஏற்பட்டு மரணமடையும் சந்தர்ப்பம் உண்டு.

மருத்துவர்களால் மேற் கொள்ளப்படும் பிரேதப் பரிசோதனையில் தான் அவர்களின் இருதயத்தில் ஏற்பட்ட ஒருவகை தொற்று நோயால்தான் மரணமடைந்தனர் என்பது தெரியவரும். இதுபோன்று இரத்தத்தில் கோமிசைடின் (Homoecystine) என்ற பொருள் அதிகரிக்கும் போதும் மாரடைப்பு ஏற்படும் வாய்ப்பு உண்டு. தினமும் விட்டமின் சி அடங்கிய தோடம்பழச்சாறு அல்லது தேசிக்காய் சாறு பருகி விட்டமின் ஈ 200 iu எடுப்ப தன் மூலம் இது ஏற்படாது தடுக்க முடியும்.

இருதயத்திற்கு இரத்தத்தை விநியோகிக்கும் முடிவுறு நாடிகளில் (Coronary Arteries) ஏற்படும் அடைப்பு காரணமாகவே மாரடைப்பு ஏற்படுகிறது. இந்நாடிகளில் கல்சியம் உப்பு மற்றும் இரத்தக் கொழுப்பு படிப்படியாகப் படிந்து அதன் விட்ட த்தைக் குறைக்கும்.

சிறு நீரகத்தின் (Kidney) மேல் இருக்கும் அட்ரீனல் சுரப்பி (Adrenal Gland) சுரக்கும் அட்ரீனாலின் (Adrenaline) என்ற சுரப்பு இரத்தக் குழாய்களில் படிந்துள்ள படிவத்தை உடைத்து எடுத்து இரத்தத்துடன் கலக்கச் செய்யும். இவ்வாறு இடம்பெயர்ந்த படிவம், இருதயத்திலுள்ள மிகக் குறுகிய முடிவுறு நாடிக்குள் புகும்போது அதை அடைத்து இரத்தோட்டத்தைத் தடுத்து மாரடைப்பு ஏற்பட வழி வகுக்கும்.

மேற்படி சுரப்பு அதிகாலை மூன்று மணியளவில்தான் அதிகமாகக் சுரக்கப்படும். இதனால்தான் அதிகமான மாரடைப்பு அதிகாலையில் ஏற்படுகிறது.

இரத்தோட்டத்தில் இரத்த உறைகட்டிகள் (Blood Clots) தோன்றுவதற்கு உயர் கொலொஸ்ரோல் (Cholesterol) அளவு வழி வகுக்கிறது. இரத்தோட்டத்தில் கலந்து செல்லும் இவ் இரத்த உறை கட்டிகளும் மேல் கூறியவாறு முடிவுறு நாடிகளில் அடைப்பை ஏற்படுத்தி மாரடைப்பை ஏற்படுத்தும்.

மேற்படி முடிவுறு நாடிகளில் ஏற்படும் கொழுப்புக்கட்டி படிமானம் திடீரென ஏற்படுவதில்லை. இது ஒன்பது வயதிலிருந்தே படிப்படியாக ஏற்படுகிறது எனச் சமீபத்திய ஆய்வு மூலம் தெரியவந்துள்ளது. எனவே, இளம் வயதிலிருந்தே பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டால் இது ஏற்படாது தடுக்க முடியும்.

அன்ஜைனா எனப்படும் மார்பு வலி ஒரு கிரேக்க மொழிச் சொல்லா கும். ‘உதவி கேட்டு இருதயம் அழுகிறது’ என்பது இதன் பொருளாகும். ஒரு மெல்லிய வலி நெஞ்சின் மத்தி யில் ஏதாவது கடினமான வேலைகள் செய்யும்போது ஏற்படும்.

அளவிற்கு மீறி உணவு உண்டபோதும், இவ்வலி ஏற்படும் உணர்ச்சிவசப்படும்போதும் மன உளைச்சல் அதிகரிக்கும்போதும் பயம், கோபம், ஏமாற்றம் ஏற்படும் போதும் இவ்வலி ஏற்படும். மேற் படி உணர்ச்சி வசப்பட்ட நிலையில் முன் குறிப்பிட்ட அட்ரீனல் சுரப்பி Catecholamine என்ற சுரப்பை அதிகமாக சுரப்பதால் இருதயம் விரை வாகத் துடிப்பதால் மார்பு வலி ஏற்படும். இவ்வாறாக ஏற்படும் மார்பு வலியை அலட்சியம் செய்யாது தகுந்த சிகிச்சை மேற்கொண்டால் மாரடைப்பு ஏற்படாது தடுக்கலாம்.

ஆரோக்கியமான உணவுடன் உடற் பயிற்சி, மற்றும் யோகா போன்றவற்றை இளம் வயதிலிருந்தே மேற் கொண்டால் இருதய நோய் ஏற்படாது தடுக்க முடியும் என மருத்துவ ஆய்வுகள் கூறுகின்றன.

இதனால் இளம் வயதில் மாரடைப்பு ஏற்படுவது தடுக்கப்படும். கடந்த நான்கு வருடங்களில் இளம் வயதினருக்கு ஏற்படும் இருதய நோய் 25 சதவீதம் அதிகரித்துள்ளது என அறியக்கிடக்கிறது.

மார்பின் மத்தியில் ஏற்பட்ட மெல்லிய வலி தீவிரமடைந்து இடது கைக்கு சில வேலைகளில் வலது கைக்கும், கீழத் தாடைக்கும் பரவுதல், குமட்டல் அல்லது வாந்தி, நெஞ்சில் முட்டு, மூச்சு நின்று விடுதல் அல்லது மெல்லிய மூச்சு, அதிக வியர்வை, பலவீனம், மயக்கம், தலைச்சுற்று, தொண்டைக்குள் அடைப்பு போன்றவை அன்ஜைனாவின் அறிகுறிகளாகும்.

சிலவேளைகளில் வாய்வுக் கோளாறுகளினாலும் மேற்படி அறிகுறிகள் தென்படும். வாய்வுக் கோளாறு என கை மருத்துவம் பார்க்காது உடனடியாக மருத்துவமனைக்குப் போய் பரிசோதனைகளை மேற்கொண்டு அன்ஜைனா ஏற்பட்டுள்ளதா என உறுதி செய்துகொள்ள வேண்டும்.

மேற்படி அறிகுறிகள் தென்பட்டதும் முதல் உதவியாக GTN என்ற நாக்குக் கீழ் வைக்கும் மாத்திரை, ஆஸ்பிரின் எடுத்தால் இரத்தக் குழாயில் ஏற்பட்ட அடைப்பு அகலும். இவை கிடைக்காதபோது கடும் சாயத்துடன் சுடச் சுடப் பாலில்லாத தேனீர் பருக அடைப்பு ஓரளவு அகலும் என சமீபத்தில் ஆய்வில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

மாரடைப்பு ஏற்பட்டதும் பதற்றமடையாது நோயாளியை மருத்துவமனைக்கு எடுத்துச் செல்ல வேண்டும். மாரடைப்பு ஏற்பட்ட அடுத்த ஒரு மணித்தியாலத்தை மருத்துவர்கள் தங்கமான நேரம் (Golden Hour) என்பர். இந்த ஒரு மணித்தியாலத்திற்குள் நோயாளிக்கு சிகிச்சை அளித்தால் உயிராபத்து ஏற்படுவதைத் தடுக்க முடியும்.

சில சமயம் தனிமையில் ஒருவர் வெளியூருக்குக் காரோட்டிக்கொண்டிருக்கும் போது திடீரென நெஞ்சுவலி ஏற்படலாம். பக்கத்து மருத்துவமனைக்குப் போக ஒரு மணித்தியாலத்திற்கு மேல் பிடிக்கலாம் என்ற நிலையில் அவர் சில முதலுதவிகளைத் தானே செய்யமுடியும்.

நன்கு உட்கார்ந்துகொண்டு நெற்றியைக் கையால் தாங்கிக்கொண்டு வாந்தி எடுப்பது போல் ஆழமாக சிறிது நேரம் ஒலி எழுப்பிவிட்டு நிற்பாட்டி விட்டுச் சிறிது நேரம் ஆழமாகச் சுவாசம் எடுக்கவேண்டும். இதனால் இருதயம் பிடித்துவிடப்படுவதால் (Massagin) அது மீண்டும் துடிக்கும் சாத்தியம் ஏற்படும்.

மேலும், ஆழ்ந்த சுவாசத்தின்போது அதிகபட்ச பிராணவாயு உட்செல்வதால் இருதயத்திற்கு போதிய பிராணவாயு கிடைத்து மீண்டும் இயங்கும் வாய்ப்பு உண்டு. இதனால் காலம் பிந்தி மருத்துவமனைக்கு அவரை எடுத்துச் சென்றாலும் அவர் உயிர்பிழைக்க முடியும்.

பண்டிகைக் காலங்களில் தான் அதிகமான மாரடைப்பு ஏற்படுவது அவதானிக்கப்பட்டுள்ளது. அக்காலங்களில் அளவுக்கு மீறிய மதுபாவனை, புகைத்தல், கொழுப்பு, உப்பு அதிக மடங்கிய உணவுகளை அளவிற்கு மீறி உட்கொள்ளல், போதிய ஓய்வின்றி இரவு முழுவம் நடனமாடுதல் போன்றவை மாரடைப்பை வரவழைக்கும் எனவே, இருதய நோயாளர்கள் இரவு விருந்துகளுக்குப் போகும்போது மறக்காது GNT மாத்திரையை எடுத்துச் செல்ல வேண்டும்.

உணவுக் கட்டுப்பாடு, கிரமமான உடற் பயிற்சி மற்றும் யோகா, மன உளைச்சலைத் தவிர்த்தல், புகைத்தலை விட்டுவிடல், மிதமான மதுப்பாவனை, அடிக்கடி மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளல் போன்றவை மூலம் அன்ஜைனா ஏற்படாது தடுக்கலாம்.

பாலூட்டும் பெண்களுக்கு இவ் ஆபத்து 19 சதவீதம் குறைவு என்றும், அடிக்கடி உடலுறவில் ஈடுபடும் தம்பதிகளுக்கு, மாரடைப்பு ஏற்படும் அபாயம் குறைவு எனவும் சமீபத்திய மருத்துவ ஆய்வுகள் மூலம் தெரிய வந்துள்ளது.

முட்டை மஞ்சள் கரு, ஆட்டிறைச்சி, கொழுப்பு நிறைந்த பெரிய மீன்கள், நெய், பட்டர், கொழுப்பு அடங்கிய பால், வித்துகள், உலர் பழங்கள் போன்றவை இரத்தத்தில் கொலொஸ்ரோலின் அளவை அதிகரிக்கும். எனவே இவற்றைத் தவிர்க்கவேண்டும்.

தானிய உணவு வகைகள் இருதய நோய் மருந்து போல் செயல்பட்டு மாரடைப்பு ஏற்படாது தடுக்கும் வல்லமை கொண்டவை என ஒரு ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தினமும் நார்ச்சத்து (Fibres) அடங்கிய உணவு வகைகளை உண்ண மாரடைப்பு 29 சதவீதம் குறையும் எனக் கூறப்படுகிறது.

தானிய உணவுகளுடன் கிரமமான யோகாவில் ஈடுபட்டால் இருதய ஆரோக்கியம் மேம்படும். இவற்றிலுள்ள நார்ப் பொருட்களும், விட்டமின்களும் ஆரோக்கியத்தைப் பேணும்.

மத்தியத்தரை நாடுகளில் (Mediterranean) உள்ள மக்களுக்கு இருதய நோய் ஏற்படுதல் மிகக் குறைவு. அவர்களின் உணவில் மீன், ஒலிவ் எண்ணெய், வைன் அடங்கியிருப்பதே இதற்குக் காரணமாகும். இருதய நோய் ஏற்படாது தடுக்கும் பல்வேறு ஒட்சிடனெதிரிகள் (antioxidants) இவற்றில் அபரிமிதமாக அடங்கியுள்ளன.

புகைத்தலைத் தவிர்த்து அதிக அளவு மரக்கறிவகைகள், பழங்கள் ஒட்ஸ் பயறு வகைகள், முழுத் தானிய வகைகள், மீன் போன்ற உணவுகளை உட்கொண்டு நடத்தல், துவிச்சக்கர வண்டி பதிதல், யோகா போன்றவற்றில் ஈடுபட்டால் இருதய நோய் ஏற்படாது தடுக்கமுடியும்.

மேல் குறிப்பிட்டவாறு 2020 ஆம் ஆண்டு ஒரு கொள்ளை நோயாக இருதய நோய் பரிமாணமடைவதைத் தடுக்க இப்போதே வாழ்க்கை முறை, உணவு, உடற்பயிற்சியில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.

இருதய நோயின் தாற்பரியத்தைக் கவனத்தில் கொண்டு இந்நோய் பற்றிய அறிவையும், விழிப்புணர்வையும் மக்களிடையே ஏற்படுத்தும் பொருட்டு உலக இருதய நோய் தினம் ஆண்டு தோறும் செப்டம்பர் மாதம் கடைசி ஞாயிறு தினத்தில் அனுஷ்டிக்கப்படுகிறது.

விடுதலை நாளான இத்தினத்தில் பெரும்பாலான மக்கள் இத்தின நிகழ்வுகளில் கலந்துகொண்டு பயனடைய முடியும். இவ்வருடம் இத்தினம் செப்டெம்பர் 27ஆம் திகதி அனுஷ்டிக்கப்பட்டது. ‘இதயத்திற்கு இணக்கமான வேலைத்தளம்’ என்பதே இவ்வருட தொனிப்பொருளாகும்.

தொழில் புரிவோர் தங்களின் நேரத்தின் அதிக அளவை வேலைத்தளத்தில் செலவிடுகின்றனர். குடும்பத்தோடு செலவிடும் நேரம் மிகக் குறைவு. வேலைத்தளத்திற்குப் பயணிக்கும்போது ஏற்படும் சனநெரிசல், காலதாமதம், மன உளைச்சலை அதிகரிக்கின்றன.

வேலை செய்யும் இடமும் ஆரோக்கியத்தைப் பாதிக்கும். சிகரட் புகை அடங்கிய சூழல், காற்றோட்டமில்லாத குளிரூட்டியின் (Air Conditioner) கீழ் வேலை செய்தல், காலக்கெடுவுக்குள் வேலையை முடிக்க வேண்டும் என்ற கடினமான உத்தரவு, கொழுப்பு, உப்பு அதிகம் அடங்கிய சிற்றுண்டிகளைக் கொண்ட சிற்றுண்டிச்சாலை போன்றவை மன உளைச்சலை ஏற்படுத்துவதால் இருதய நோய் ஏற்படுகிறது. இவற்றைக் கட்டுப்படுத்தவே தான் இத்தொனிப் பொருள் இந்த வருடம் கொடுக்கப்பட்டது.

நவீன மருத்துவமுறையில் இருதய நோயாளர்கள் பல்வேறு தேவையற்ற பரிசோதனைகளுக்கும், செய்த பரிசோதனைகளைத் திரும்பவும் செய்தல் போன்றவற்றிற்க்கும் உட்படுத்தப்படுவதால் பெரும் பணம் செலவழிக்க நேரிடுகிறது. இதனால் தனியார் மருத்துவமனைகள் பெரும்பணம் சம்பாதிக்கின்றன. இருதய வைத்திய நிபுணர்களும் இலட்சக் கணக்கில் சம்பாதிக்கின்றனர்.

ஆரோக்கியமான உணவை உட்கொண்டு கிரமமான யோகா பயிற்சியில் ஈடுபட்டால் பரம்பரை காரணிகள் உட்பட இருதய நோயை ஏற்படுத்தும் காரணிகள் அகன்று இருதயநோய் ஏற்படாது தடுக்க முடியும்

LEAVE A REPLY