பஸ் குடை சாய்ந்து விபத்து 40 பேர் வைத்தியசாலையில் அனுமதி!

0
278

பொலன்னறுவை, வெலிகந்த பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மட்டக்களப்பு-பொலன்னறுவை பிராதான வீதியில் தனியார் பஸ் வண்டி ஒன்று குடை சாய்ந்து விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த 40 பேர் காயமடைந்துள்ளனர். குறித்த சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இந்நிலையில், சம்பவத்தில் காயமடைந்த 40 பேரும் பொலன்னறுவை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.

கதுறுவெலையிலிருந்து கல்முனை நோக்கி பயணித்த பஸ் ஒன்றே இவ்வாறு விபத்துள்ளகுள்ளாகியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வெலிகந்த பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

bus_exi_001 bus_exi_002 bus_exi_003 bus_exi_004

LEAVE A REPLY