20 ஆண்டுகளுக்கு பிறகு வடகொரியா மீது கடுமையான பொருளாதார தடைக்கு ஐ.நா. அங்கீகாரம்

0
169

ஹைட்ரஜன் குண்டு வெடித்த வடகொரியா மீது புதிய பொருளாதார தடை விதிக்க ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் ஒப்புதல் அளித்துள்ளது.

ஆசிய நாடுகளில் ஒன்றான வடகொரியா அணுகுண்டு, ஹைட்ரஜன் குண்டு, அணு ஆயுதங்களை நீண்ட தூரம் சுமந்து சென்று தாக்குதல் நடத்தும் ஏவுகணைகள் ஆகியவற்றை அவ்வப்போதுச சோதனை நடத்தி வருகிறது. தவிர அண்டை நாடான தென்கொரியாவை அச்சுறுத்தும் விதமான நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருகிறது. ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கட்டுப்பாட்டை மீறி வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன் நடந்துகொள்வதால் அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ் நாடுகளின் எதிர்ப்பையும் சந்தித்து வருகிறார்.

இதனால் அந்த நாட்டின் மீது சில தடைகளும் விதிக்கப்பட்டு உள்ளன.

இந்நிலையில் முதன்முதலாக ஹைட்ரஜன் குண்டு சோதனையை வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளதாக வடகொரியா அறிவிப்பு வெளியிட்டது. அந்த நாடு சோதித்துள்ள ஹைட்ரஜன் குண்டு, இரண்டாம் உலகப்போரின்போது ஹிரோஷிமா, நாகசாகி மீது வீசப்பட்ட அணுகுண்டை விட 25 ஆயிரம் மடங்கு வலு கொண்டது என பி.பி.சி. செய்தி நிறுவனம் கூறியது. ஹைட்ரஜன் குண்டு வெடித்து சோதித்த கையோடு, தொலைதூர ஏவுகணை சோதனை ஒன்றையும் வடகொரியா நடத்தியது.

வடகொரியாவின் இந்த சோதனையால் அண்டை நாடான தென்கொரியாவில் பதற்றம் அதிகரித்து உள்ளது. அமெரிக்கா, வடகொரியா மீது புதிய பொருளாதார தடையை விதித்தது.

ஹைட்ரஜன் குண்டு வெடிப்பு, தொலைதூர ஏவுகணை சோதனை தொடர்பாக வடகொரியா மீது புதிய பொருளாதார தடை விதிக்க ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் நேற்று முன் தினம் ஓட்டெடுப்பு நடைபெற்றது. அமெரிக்கா தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

கடந்த வாரம் பாதுகாப்பு கவுன்சிலில், தீர்மானத்தின் வரைவு மசோதாவை அமெரிக்கா தாக்கல் செய்தது, அதில், வடகொரியாவின் மீதான குறிப்பிடத்தக்க கட்டுப்பாடுகளை சீனா இறுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.

இந்நிலையில், அமெரிக்கா தாக்கல் செய்த மனுவை ஏற்றுக் கொண்டு வடகொரியா மீதன தடைக்கு ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சில் ஒப்புதல் அளித்துள்ளது.

LEAVE A REPLY