எங்கள் நாட்டிற்கு வர வேண்டாம்: அதிபர் ஒபாமாவிற்கு நோபல் பரிசு பெற்ற அர்ஜெண்டினர் கடிதம்

0
156

1980 ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவர் அர்ஜெண்டினா நாட்டைச் சேர்ந்த அடோல்ஃபோ பெரீஸ் எஸ்க்யுவெல். இவர் தங்கள் நாட்டிற்கு வர வேண்டாம் என்று அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவிற்கு கடிதம் ஒன்றினை எழுதியுள்ளார்.

அர்ஜெண்டினா நாட்டில் ஆட்சி கவிழ்ப்பு நடைபெற்ற 1976-களின் தொடக்கத்தில் இருந்து ராணுவ ஆட்சியில் ஏராளமான படுகொலைகள் நடைபெற்றன. சோசலிஷ்டுகள் என்று கருதப்படுபவர்கள் அனைவரும் படுகொலை செய்யப்பட்டனர். இதனையடுத்து 1983 வரை ராணுவ ஆட்சி நடைபெற்று வந்தது.

ஆட்சி கவிழ்ப்பு நடைபெற்ற மார்ச் 24-ம் நாள் ஆண்டுதோறும் விடுமுறை தினமாக அர்ஜெண்டினாவில் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த வருடம் மார்ச் 24-ம் தேதி அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா அர்ஜெண்டினா வருகை புரிய உள்ளார்.

இந்நிலையில், மார்ச் 24-ம் தேதி தங்கள் நாட்டிற்கு வர வேண்டாம் என்று அதிபர் ஒபாமாவிற்கு திறந்த மடல் ஒன்றினை எழுதியுள்ளார்.

ஆட்சி கவிழ்ப்பு நடைபெற்று 40-வது ஆண்டு என்பதால் தவிர்க்க வேண்டும் என்று பெரீஸ் கேட்டுக் கொண்டார். ஒபாமாவை வரவேற்பதாக கூறியுள்ள அவர், ஆனால் மார்ச் 24-ம் தேதி வரக்கூடாது என்று வலியுறுத்தியுள்ளார்.

முன்னதாக, 1976 முதல் 1983 வரை நடைபெற்ற இராணுவ ஆட்சியில் சுமார் 30 ஆயிரம் பேர் கொல்லப்பட்டதாக மனித உரிமை அமைப்புகள் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY