ஆசியக் கிண்ண டி20 கிரிக்கெட்: வங்காளதேசத்திற்கு 130 ரன்கள் வெற்றி இலக்கு

0
190

20 ஓவர் ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரில் இன்று நடக்கும் ஆட்டத்தில் பாகிஸ்தான்-வங்காளதேச அணிகள் விளையாடி வருகின்றன. டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தது.

பாகிஸ்தான் அணியில் நவாஸ் நீக்கப்பட்டு அன்வர் அலி சேர்க்கப்பட்டார். அதேபோல் வங்காளதேச அணியில் இரண்டு மாற்றம் செய்யப்பட்டது. தமிம் இக்பாலுக்கு பதிலாக நூருல் ஹசன் சேர்க்கப்பட்டனர். காயமடைந்த முஸ்தாபிகருக்கு பதிலாக அரபாத் சன்னி சேர்க்கப்பட்டார்.

பாகிஸ்தான் தொடக்க ஆட்டகாரர்கள் மன்சூர் மற்றும் சர்ஜில் கான் இருவரும் மீண்டும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றினர். ஆனால் விக்கெட் கீப்பர் சர்பிராஸ் அகமதுவும், சோயப் மாலிக்கும் நிலைத்து நின்று ஆடி அணியை சரிவில் இருந்து மீட்டனர். மாலிக் 41 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். சர்பிராஸ் அகமது அதிரடியாக ஆடி 58 ரன்கள் குவித்தார். இதனால், 20 ஓவர் முடிவில் பாகிஸ்தான் அணி 7 விக்கெட்களை இழந்து 129 ரன்கள் எடுத்துள்ளது.

வங்காளதேசம் தரப்பில் தஸ்கின் அகமது சிறப்பாக பந்து வீசினார். இவர் 4 ஓவர்களில் 10 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 1 விக்கெட்டை வீழ்த்தினார். அல்-அமீன் ஹொசைன் 3 விக்கெட்களையும், சன்னி அராபத் இரண்டு விக்கெட்களையும் வீழ்த்தினார்கள்.

அப்ரிடி தலைமையிலான பாகிஸ்தான் அணியில் முகமது அமிர், இர்பான் முகமது, முகமது சமி வேகப்பந்து வீச்சில் மிரட்டக்கூடியவர்கள். இவர்களை சமாளித்து 130 ரன்களை எடுத்தால் மட்டுமே வங்காளதேசத்தின் இறுதிப் போட்டி கனவு நிறைவேறும்.

LEAVE A REPLY