சீரழிந்த அரசியல் கலாச்சாரம் கிழக்கில் முற்றாக ஒழிக்கப்பட வேண்டும்; பிரதியமைச்சர் அமீர்அலி

0
162

கிழக்கு மாகாணத்தில் செத்து சின்னாபின்னமாகி காணப்படும் அரசியல் கலாச்சாரம் முற்றாக ஒழிக்கப்பட வேண்டும் என கிராமிய பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார்.

மட்டக்களப்பு –ஆரையம்பதி பாலமுனை பிரதேசத்தில் அமைக்கப்பட்ட புடைவை உற்பத்தி சம்பந்தமான பயிற்சியளித்தல் ,வடிவமைத்தல் மற்றும் சாயமிடல்; சேவைகள் நிலைய திறப்பு விழாவில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு பிரதியமைச்சர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

கிழக்கு மாகாணத்தில் பொய்களும் பித்தலாட்டங்களும் கலந்த அரசியல் கலாச்சாரம் இல்லாதொழிக்கப்பட்டு செய்ததை செய்ததாகவும், செய்யாததை செய்யவில்லை என உண்மையை உண்மையாக சொல்லும் அரசியல் கலாச்சாரம் உருவாக்கப்பட வேண்டும்.

இன்றைய சூழ்நிலையில் கிழக்கில் மோசமான அரசியல் கலாச்சாரம் நிலவி வருகின்றது.

ஒரு வீட்டை கட்டி முடித்த பின் அதைக் கூட அரசியல்வாதியொருவர் திறந்து வைத்து விடுவாரோ என்ற அச்சம் பொது மக்களுக்கு மத்தியில் நிலவி வருகின்றது.

நானா நீயா என்ற போட்டியை விட மக்களுக்கு சேவைகள் சேர வேண்டும் என்பதில் தவறி விடுகின்றோம்.

இப்டியான கலப்பட அரசியல் கலாச்சாரம் நீக்கப்பட்டு மக்களுக்கான உண்மையான அரசியல் கலாச்சாரம் கொண்டுவரப்பட வேண்டும்.

இன்று ஜனாதிபதி மற்றும் பிரதமர் தலைமையிலான தேசிய அரசாங்கம் இன மத கருத்து வேறுபாடுகளுக்கு அப்பால் பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது.

அதில் ஒன்றாக இந்த திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதனுடாக உள்ளுர் உற்பத்தியை மேம்படுத்தி கைத்தறி மற்றும் நெசவு உள்ளிட்டவைகளில் மேம்பட வேண்டும்.

கிழக்கு மாகாணம் கைத் தொழிலில் அதிக வளங்களை கொண்டுள்ள ஒரு மாகாணமாகும்.

ஆகவே இதில் பிரதேச வாதம் என்பவற்றிற்கு அப்பால் சகலரும் ஒன்றிணைந்து முன்னேற்ற கரமான எதிர்காலத்தை நோக்கி செல்ல வேண்டும்.

குறித்த நியைத்தினூடாக இன,மத வேறுபாடுகளுக்கு அப்பால் மட்டக்களப்பு அம்பாறை உள்ளிட்ட மாகாணங்களைச் சேர்ந்த சகலரும் பயனடைய வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.

(பழுலுல்லாஹ் பர்ஹான்)

LEAVE A REPLY