ஜாகீர் கானை விட நெஹ்ரா சிறந்த பந்து வீச்சாளர்: சேவாக் சொல்கிறார்

0
151

இந்திய கிரிக்கெட்டில் 2000-ம் ஆண்டிற்கு பிறகு உருவான வேகப் பந்து வீச்சாளர்களில் மிகச் சிறந்தவர் என அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டவர் ஜாகீர் கான்.

ஆனால், ஜாகீர் கானை விட நெஹ்ரா சிறந்த பந்து வீச்சாளர் என்று இந்தியாவின் முன்னாள் அதிரடி தொடக்க ஆட்டக்காரரான வீரேந்திர சேவாக், தெரிவித்துள்ளார்.

இதற்கான காரணமாக சேவாக் சொல்வது “ஒரு நாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் ஜாகீர் கானை விட நெஹ்ரா சிறந்த பந்து வீச்சாளர். ஏனென்றால் பந்து வீசும் வேகம், நேர்கோடு மற்றும் குறிப்பிட்ட இடத்தில் துல்லியமாக வீசுவதில் நெஹ்ரா சிறந்தவர். மேலும் ஒரு நாள் போட்டிகளில் நெருக்கடியான சூழ்நிலையில் பந்து வீசி அதிக விக்கெட்களை நெஹ்ரா வீழ்த்தியுள்ளார்.

2011-ம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை வரை சிறப்பாக செயல்பட்டார். அதன் பிறகு காயத்தால் விளையாடவில்லை. ஆனால் காயத்தில் இருந்த மீண்ட பிறகு ஏன் அவர் அணியில் சேர்க்கப்படவில்லை என்பதும் அதற்கான காரணமும் எனக்கு தெரியவில்லை. உடல் தகுதியை மேம்படுத்துவதற்காக கடுமையாக உழைத்துள்ளார் நெஹ்ரா. தற்போது உள்ள சூழ்நிலையில் மிகவும் நம்பகமான வேகப்பந்து வீச்சாளர் நெஹ்ரா” என்று சேவாக் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY