இலங்கை கிரிக்கட் அணியில் மட்டக்களப்பு வீரன்

0
321

மட்- மெதடிஸ்த மத்திய கல்லூரியின் பழைய மாணவனும் லக்கி விளையாட்டு கழக கிரிக்கட் அணியின் தலைவருமாகிய ஜெயசூரியம் சஞ்சீவ் இலங்கை 25 வயதுக்குட்பட்டோருக்கான அணியில் தெரிவு செய்யப்பட்டுள்ளதோடு மலேசியாவில் இடம்பெற உள்ள மலேசிய அணியுடனான (Minor Team- Sri Lanka Tour of Malaysia) போட்டிக்கும் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

சகலதுறை ஆட்டக்காரர் ஆன இவர், பல தடவை தனது திறமையை வெளிப்படுத்தி 2012ம் ஆண்டு சிங்கப்பூர் அணியுடனான ஒருமைப்பாடு போட்டியிலும் மற்றும் இலங்கை A அணி, இலங்கை பிரிமியர் லீக் போட்டியில் கந்துறட்ட மரூண்ஸ் அணிக்காகவும் சம்பியன்ஸ் லீக் போடியில் அதே அணியிலும் 2013 ம் ஆண்டு இடம் பெற்றிருந்தார். இதே போன்று தனது திறமையினை மென்மேலும் வெளிப்படுத்தி மட்டக்களப்பிற்கு பெருமை சேர்க்க வாழ்த்துகின்றோம்.

(S.சஜீத்)

LEAVE A REPLY