புரவலர் பாயிஸ் மக்கீன் வபாத்தானார்

0
133

புரவலர் பாயிஸ் மக்கீன் (02.03.2016) காலமானார். (57)கொழும்பு முகத்துவாரம் ஹம்ஸா பள்ளிவாசலின் நம்பிக்கையாளர். சபையில் நீண்ட காலமாக தலைவராகப் பணி புரிந்துள்ளார். சிறிது காலம் நோய்வாய்ப்பட்டிருந்த நிலையில் தனியார் வைத்தியாலையில் அனுமதிக்கப்பட்டு காலமானார்.

07 பிள்ளைகளின் தந்தையான இவர், கொழும்பு வடக்கு பள்ளிவாசல் சம்மேளனம் உருவாகுவதற்கு முக்கிய பங்களிப்புச் செய்தவராவார். கலை இலக்கியப் பணிகளுக்கு புரவலராக பெரும் உதவிகள் செய்து இந்திய, இலங்கை கலை இலக்கியப் பணிகளுக்காக இணைப்பாளராவும் பணி புரிந்துள்ளார். இவரது ஜனாஸா இன்று செவ்வாய்க்கிழமை மாலை மாதம்பிட்டிய முஸ்லிம் மையமாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

-எம்.எஸ்.எம்.சாஹிர்-

LEAVE A REPLY