900 சட்ட விரோத வெளிநாட்டு சிகரெட்டுக்களுடன் 41 வயதான குடும்பஸ்தர் கைது

0
141

-ஏ.எச்.ஏ. ஹுஸைன் –

அம்பாறை மாவட்டம் கல்முனை பொலிஸ் பிரிவிலுள்ள சாய்ந்தமருது நகரில் 900 சட்ட விரோத வெளிநாட்டு சிகரெட்டுக்களுடன் 41 வயதான குடும்பஸ்தர் ஒருவர் செவ்வாயக்கிழமை கைது செய்யப்பட்டதாக கல்முனைப் பொலிஸார் தெரிவித்தனர்.

பொது மக்களிடமிருந்து தகவல் கிடைத்ததின் பேரில் சந்தேக நபர் நடமாடும் இடத்திற்குச் சென்ற புலனாய்வுப் பொலிஸார் அவரிடம் இருந்த சிகரெட்டுக்களுடன் அவரையும் கைது செய்தனர்.

இதேவேளை 3180 மில்லிலீற்றர் சாராத்தை சட்ட விரோதமாக தம் வசம் வைத்திருந்தார் என்ற குற்றசாட்டின் பேரில் 52 வயது குடும்பஸ்தர் ஒருவர் கல்முனைப் பொலிஸ் பிரிவிலுள்ள நற்பிட்டிமுனையில் வைத்து செவ்வாயன்று கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.

LEAVE A REPLY