68 ஆயிரம் வீடுகளை தரைமட்டமாக்குவோம்

0
579

கொழும்பு நகர எல்­லைக்­குட்­பட்ட பகு­தியில் மாத்­திரம் 68ஆயிரம் சட்­ட­வி­ரோத வீடுகள் 900 ஏக்கர் நிலப்­ப­ரப்பில் நிர்மாணிக்கப்பட்டுள்ளன என்ற புள்­ளி­வி­பரம் அர­சாங்­க­த்திற்கு கிடைக்­கப்­பெற்­றுள்­ள­தா­கவும் இதில் 90 வீத­மா­னவை அர­சாங்க நிலங்கள் எனவும் மேல்­மா­காண நகர அபி­வி­ருத்தி அமைச்சர் சம்­பிக்க ரண­வக்க தெரி­வித்தார்.

எனவே, மே மாதத்தின் முன்னர் கொழும்பு நகர எல்­லைக்குள் உட்­பட்ட அநா­வ­சிய வீடுகள் அனைத்­துமே தரை­மட்­ட­மாக்­கப்­படும்.அதேபோல் ஜன­வரி முதலாம் திக­தியில் இருந்து அநா­வ­சிய சட்­ட­வி­ரோத வீடு­களை அமைப்­ப­வர்­க­ளுக்கும், வீதி­களை மறைத்து நிலங்­களை அப­க­ரிப்­ப­வர்­க­ளுக்கும் எந்த சலு­கை­களும் வழங்­கப்­பட மாட்­டாது.

வீடு­களும் வழங்­கப்­பட மாட்­டாது எனவும் அவர் குறிப்­பிட்டார். மேல்­மா­காண நகர அபி­வி­ருத்தி அமைச்சில் நேற்று நடை­பெற்ற செய்­தி­யாளர் சந்­திப்­பில் கலந்துகொண்டு கருத்து வெ ளியிடுகையிலேயே அமைச்சர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார். அவர் மேலும் கூறு­கையில்,

கொழும்பு நகர அபி­வி­ருத்தி திட்டம் தொடர்பில் கடந்த 2012ஆம் ஆண்டு மதிப்­பீடு ஒன்று மேற்­கொள்­ளப்­பட்­டது. இதன் போது கொழும்பு நகர எல்­லைக்கு உட்­பட்ட பகு­தியில் மாத்­திரம் 68ஆயிரம் சட்­ட­வி­ரோத வீடுகள் அல்­லது முறை­யற்ற வீடுகள் கட்­டப்­பட்­டுள்­ளன என்ற புள்­ளி­வி­பரம் அர­சாங்­கத்­திற்கு கிடைக்­க­பெற்­றது.

எனினும் எனது ஆய்­வு­களின் படி 56ஆயிரம் வீடுகள் இவ்­வாறு சட்­ட­வி­ரோ­த­மான வகையில் உள்­ளன என மதிப்­பீடு செய்­யப்­பட்­டுள்­ளது. எனினும் சரி­யான புள்­ளி­வி­பர எண்­ணிக்கை எமக்கு கிடைக்­க­பெ­றவில்லை. ஆனால் இந்த தொகையில் சட்­ட­வி­ரோத குடி­யி­ருப்­புகள் இருக்கும் என மதிப்­பிட முடியும்.

இந்த பகு­தி­களில் உள்ள மக்கள் தோட்­டங்கள் என்ற பெயரில் தமது குடி­யி­ருப்­பு­களை அமைத்­துள்­ளனர். இது சரா­ச­ரி­யாக 900 ஏக்கர் பரப்பை கொண்­டுள்­ளது. இந்த பகு­தியில் 90 வீத­மான நிலம் அர­சாங்­கத்­திற்கு சொந்­த­மான நில­மாகும். அதேபோல் தனியார் உறுதிகளைக் கொண்ட நிலமும் சிறி­த­ளவு உள்­ளது.

ஆனால் இது பொது­மக்­க­ளுக்கு சொந்­த­மான நிலங்கள் அல்ல. அதேபோல் இவ்­வாறு இருக்கும் மக்­க­ளுக்கு பிரத்­தி­யேக வீடு­க­ளை­அ­மைத்து அவர்­களை குடி­ய­மர்த்தும் நட­வைக்­கை­களை அர­சாங்கம் கடந்த காலத்தில் இருந்தே முன்­னெ­டுத்து வந்­துள்­ளது.

குறிப்­பாக 18 ஆயிரம் தொடக்கம் 20 ஆயிரம் வரை­யி­லான வீடு­களை புன­ர­மைத்து இந்த மக்­க­ளுக்கு கொடுக்கும் திட்­டத்­தையும் அர­சாங்கம் முன்னெடுத்துள்­ளது. இதில் ஆரம்­ப­கட்­ட­மாக 5 ஆயிரம் வீடு­களை பொது­மக்­க­ளுக்கு ஏற்­க­னவே கைய­ளித்­துள்ளோம்.

ஏனைய பொது­மக்­க­ளுக்கும் இந்த ஆண்டு இறு­திக்குள் முழு­மை­யாக வீடு­களை கைய­ளிக்கும் துரித நட­வ­டிக்­கையை அர­சாங்கம் முன்­னெ­டுத்து வரு­கின்­றது. இதற்­காக 60 மில்­லியன் ரூபாய் செல­வா­கி­யுள்­ளது.

ஆனால் எந்த சந்­தர்ப்­பத்­திலும் அப்­பாவி மக்­களின் நிலங்­களை அர­சாங்கம் சூறை­யா­டி­யுள்­ளது என கூற முடி­யாது. இதில் 90 வீத­மான அரச நிலங்­களை பொது­மக்கள் கைப்­பற்­றி­யுள்­ளனர். இந்த மக்கள் எவரும் அப்­பா­விகள் இல்லை.

இது திட்­ட­மிட்ட ஆக்­கி­ர­மிப்பு மட்­டு­மே­யாகும். சிலர் அப்­பா­வி­க­ளாக உள்­ளனர். ஆனால் மேலும் பலர் இதை வியா­பா­ர­மாக மேற்­கொண்டு வரு­கின்­றனர்.

அதேபோல் மே 15ஆம் திகதி இந்த மக்­க­ளுக்கு வீடு­களை கைய­ளிக்கும் ஆரம்­ப­கட்ட வேலைத்­திட்டம் ஆரம்­ப­மா­கின்­றது. இதில் வழங்­கப்­படும் வீடு­க­ளுக்கு அந்த மக்கள் செல்ல முடியும். அதேபோல் மே மாதத்தின் முன்னர் அநாவ­சிய வீடுகள் அனைத்­துமே தரை­மட்­ட­மாக்­கப்­படும்.

இப்­போதே நாம் அதையும் தெரி­விக்­கின்றோம். பின்னர் அராங்கம் அநாவ­சி­ய­மாக பொது­மக்­களின் வீடு­களை உடைத்து மக்­களை வீதியில் இறக்­கு­வ­தாக குற்றம் சுமத்துவதை ஊடகங்கள் நம்பிவிடக் கூடாது.

அதேபோல் இந்த ஜனவரி முதலாம் திகதியில் இருந்து அநாவசிய சட்டவிரோத வீடுகளை அமைப்பவர்களுக்கும், வீதிகளை மறைத்து நிலங்களை அபகரிப்பவர்களுக்கும் எந்த சலுகைகளும் வழங்கப்பட மாட்டாது. வீடுகளும் வழங்கப்பட மாட்டாது. சட்டத்திற்கு அமையவே அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படும் என்றார்.

LEAVE A REPLY