பாகிஸ்தான்-வங்காளதேசம் இன்று மோதல்

0
183

20 ஓவர் ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரில் இன்று (புதன்கிழமை) இரவு 7 மணிக்கு நடக்கும் ஆட்டத்தில் பாகிஸ்தான்-வங்காளதேச அணிகள் மோதுகின்றன.

பாகிஸ்தான் அணி தனது முதல் ஆட்டத்தில் 5 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவிடம் உதை வாங்கியது. அடுத்த ஆட்டத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தை 7 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது.

மோர்தசா தலைமையிலான வங்காளதேச அணி 3 ஆட்டங்களில் விளையாடி 2-ல் வெற்றியும் (இலங்கை, ஐக்கிய அரபு அமீரகத்துக்கு எதிராக), ஒன்றில் தோல்வியும் (இந்தியாவுக்கு எதிராக) கண்டுள்ளது. இன்றைய ஆட்டத்தில் வங்காளதேசம் வெற்றி பெற்றால் இறுதிப்போட்டிக்கு முன்னேறி விடலாம். ஆனால் அந்த அணிக்கு திடீர் பின்னடைவாக பிரதான இளம் வேகப்பந்து வீச்சாளர் முஸ்தாபிஜூர் ரகுமான் விலாபகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக விலகியுள்ளார். இருப்பினும் உலக சாம்பியன் இலங்கையை சாய்த்து இருப்பதால், பாகிஸ்தானுக்கும் அதிர்ச்சி அளிக்க முடியும் என்ற நம்பிக்கையுடன் வங்காளதேசம் காத்திருக்கிறது.

அப்ரிடி தலைமையிலான பாகிஸ்தான் அணியில் முகமது அமிர், இர்பான் முகமது, முகமது சமி வேகப்பந்து வீச்சில் மிரட்டக்கூடியவர்கள். இவர்களை சமாளிப்பதை பொறுத்தே வங்காளதேசத்தின் ஸ்கோர் அமையும்.

இவ்விரு அணிகளும் இதுவரை எட்டு 20 ஓவர் போட்டிகளில் நேருக்கு நேர் சந்தித்து இருக்கின்றன. இதில் 7-ல் பாகிஸ்தானும், ஒன்றில் வங்காளதேசமும் வெற்றி பெற்றுள்ளது.

LEAVE A REPLY