பாலஸ்தீனியர்களுக்காக 252 மில்லியன் யுரோவை நிதியாக அளித்தது ஐரோப்பியன் யூனியன்

0
162

மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள பாலஸ்தீனம் நாட்டைச் சேர்ந்த அகதிகளின் சுகாதாரம், கல்வி உள்ளிட்ட நலத்திட்டங்களுக்காக ஐரோப்பியன் யூனியன் 252.5 மில்லியன் யூரோவை நிதியாக அளித்துள்ளது.

”இந்த நிதியின் மூலம், பாலஸ்தீனியம் மக்களின் கல்வி, சுகாதாரம், வறுமையில் இருந்து பாதுகாப்பு உள்ளிட்டவற்றிற்கு ஐரோப்பியன் யூனியன் உதவுகிறது.” என்று ஐரோப்பியன் யூனியன் வெளியுறவுக் கொள்கை தலைவர் மோஹிரினி தெரிவித்தார்.

இதன் மூலம் பாலஸ்தீன அகதிகளின் அடிப்படை வசதிகள் நிறைவேற்றப்படும் என்றும் ஆனால் இந்த நடவடிக்கைகள் போதுமானது அல்ல என்றும் கூறினார்.

மேலும், ”பாலஸ்தீன நிறுவனங்கள் நிச்சயம் வலிமையானதாகவும், ஜனநாயக தன்மையோடும், பொறுப்புடனும் வளர வேண்டும்” என்றும் மோஹிரினி தெரிவித்தார்.

2016-ம் ஆண்டு வழங்கப்படும் நிதியின் முதல் பகுதி என்று ஐரோப்பியன் கமிஷன் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் வெடித்த வன்முறையில் 178 பாலஸ்தீனியர்கள் மற்றும் 28 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY