ஆசியக் கிண்ண 20 ஓவர் கிரிக்கெட்: இந்தியாவுக்கு 139 ரன்கள் வெற்றி இலக்கு

0
261

ஆசியக் கிண்ண 20 ஓவர் கிரிக்கெட் தொடர் வங்காளதேசத்தில் நடைபெற்று வருகிறது. இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய 5 நாடுகள் பங்கேற்று விளையாடி வருகின்றன.

ஒவ்வொரு அணியும், மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். புள்ளிகள் அடிப்படையில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும்.

இதுவரை 6 ஆட்டங்கள் முடிந்துள்ளன. இந்தியா 2 ஆட்டத்தில் 2 வெற்றியுடன் 4 புள்ளிகள் பெற்று முன்னிலையில் உள்ளது. வங்காளதேசம் 3 ஆட்டத்தில் 4 புள்ளியும், இலங்கை, பாகிஸ்தான் அணிகள் 2 ஆட்டத்தில் விளையாடி தலா 2 புள்ளியும் பெற்றுள்ளன. ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தான் மோதிய 3 ஆட்டத்திலும் தோற்றது.

இந்நிலையில் 7–வது ‘லீக்’ ஆட்டம் இன்று மாலை 7 மனிக்கு தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் தோனி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். இந்திய அணியில் ஒரு மாற்றம் செய்யப்பட்டிருந்தது. ரகானேவிற்கு பதிலாக தாவன் சேர்க்கப்பட்டிருந்தார்.

இலங்கை அணியில் கேப்டன் மலிங்கா காயத்தில் உள்ளார். முழங்காலில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக அவர் வங்காளதேசத்துக்கு எதிரான ஆட்டத்தில் விளையாடவில்லை. காயத்தில் இருந்து மீளாததால் இன்றைய போட்டியிலும் அவர் சேர்க்கப்படவில்லை.

தொடக்க ஆட்டகாரர்களாக சந்திமலும், தில்ஷனும் களமிறங்கினார்கள். சந்திமலை நெஹ்ரா 4 ரன்களில் வெளியேற்றினார். 18 ரன்கள் எடுத்திருந்த தில்ஷனை, பாண்டியா அவுட் ஆக்கினார். இலங்கை அணி குறிப்பிட்ட இடைவெளியில் விக்கெட்களை இழந்ததால், அதிரடியாக ஆடி ரன் குவிக்க முடியவில்லை.

அதிகபட்சமாக கபுகேதரா 30 ரன்கள் குவித்தார். கடைசி நேரத்தில் பெரேரா அதிரடியாக ஆடி 6 பந்தில் 17 ரன்கள் விளாசினார். இதனால், 20 ஓவர் முடிவில் அந்த அணி 9 விக்கெட்களை இழந்து 138 ரன்கள் எடுத்தது.

இந்தியா தரப்பில் பும்ரா, பாண்டியா மற்றும் அஸ்வின் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள். 139 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி விளையாடி வருகிறது.

LEAVE A REPLY