பொது மக்களுக்கு விடுக்கும் அன்பான வேண்டுகோள்..

0
222

காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனத்தின் நிர்வாகப் பரம்பலுக்கு உட்பட்ட காத்தான்குடி மற்றும் அதனை அண்மித்துள்ள முஸ்லிம் பிரதேசங்களில் ஏற்படும் ஜனாஸா நல்லடக்கம் தொடர்பில் கடந்த 09.12.2012ம் திகதி காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளன பொதுச்சபை உறுப்பினர்கள், ஜம்இய்யதுல் உலமாவின் நிர்வாக உறுப்பினர்கள் மற்றும் சகல பள்ளிவாயல்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்ட ஜனாஸா நல்லடக்கம் தொடர்பில் தீர்க்கமான முடிவுகளை காண்பதற்காக கூட்டப்பட்ட கலந்துரையாடலில் பின்வரும் தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டன என்பதை பொதுமக்களுக்கு அன்புடன் தெரிவித்துக் கொள்கின்றோம்.

1. ஜனாஸா பற்றிய அறிவித்தல்கள் மிகச் சுருக்கமாக அமையப் பெறுவதுடன் குடும்பத்தில் பிரபல்யமிக்கவர்களின் பெயர்களை மட்டும் அறிவித்தல் கொண்டிருத்தல் வேண்டும்.

2. ஆண்களின் ஜனாஸாவை மஹ்றம் இல்லாத பெண்களும் பெண்களின் ஜனாஸாவை மஹ்ரம் இல்லாத ஆண்களும் பார்ப்பதை கண்டிப்பாக தவிர்த்துக் கொள்ளல் வேண்டும்.

3. பொதுவாக ஒரு மஹல்லாவில் ஜனாஸா நிகழும்போது அதுபற்றி குறித்த பள்ளிவாயல் நிர்வாகத்திற்கு தெரியப்படுத்துவதுடன் குறிப்பாக வழமையாக பள்ளிவாயல்களில் இடம்பெறும் ஜனாஸா நல்லடக்க நடைமுறைகளில் ஏதும் மாற்றம் செய்ய விரும்பும் குடும்பத்தினர் தமது விருப்பத்தினை முறையாக பள்ளிவாயல் நிர்வாகத்திற்கு தெரியப்படுத்தல் வேண்டும்.

4. ஜனாஸா நிகழ்வு பற்றி குறித்த பள்ளிவாயலில் கடமை புரியும் பேஷ் இமாம், முஅத்தின் மற்றும் ஜனாஸா கடமையுடன் தொடர்புடையோருக்கு முறையாகத் தெரிவித்தல் வேண்டும்.

5. தற்போது அமுலில் இருக்கும் பள்ளிவாயல்களில் ஜனாஸாக்களை பார்வை இடுவதில்லை எனும் நடைமுறை இன்ஷா அல்லாஹ்

எதிர்வரும் 2013ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் கண்டிப்பாக அமுல்படுத்தப்படும் என்பதனை கவனத்திற் கொள்ளவும்.

6. மக்பறாவில் இடம்பெறும் உபதேசத்தினை பத்து நிமிடங்களுக்குள் சுருக்கிக் கொள்வதுடன் குறித்த உபதேசத்தில் கருத்து முரண்பாடான மார்க்க விடயங்கள் குறித்தோ அல்லது பள்ளிவாயல்களின் நிர்வாக நடைமுறைகளுடன் தொடர்பான விடயங்கள் குறித்தோ பேசுவதை முற்றாகத் தவிர்த்தல் வேண்டும்.

7. பிரமுகர்களின் ஜனாஸா நிகழ்வில் அனுதாப உரை நிகழ்த்தப்பட வேண்டும் என்று பள்ளிவாயல் நிர்வாகமும் குடும்பத்தினரும் கருதுமிடத்தில், இவ்வுரையை 10 நிமிடங்களுக்குள் அமைத்துக் கொள்வதுடன் பேச்சாளர் ஒருவரை நியமிக்கும் விடயத்தில் குடும்ப உறுப்பினர்களுடன் பள்ளிவாயல் நிருவாகம் கலந்தாலோசனை செய்து கொள்ளல் வேண்டும்.

LEAVE A REPLY