இலங்கை அணி வழி தவறி விட்டது: மெத்தியூஸ்

0
406

பங்களாதேஷ் அணியுடனான போட்டியின் போது இலங்கை அணி வழிதவறி விட்டதாக அணித்தலைவர் மெத்தியூஸ் தெரிவித்துள்ளார்.

நேற்று நடைபெற்ற இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான ஆசிய கிண்ண கிரிக்கட் போட்டியில் 23 ஓட்டங்களால் பங்களாதேஷ் வெற்றி பெற்றது. பங்களாதேஷின் இந்த வெற்றி இலங்கை ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

இந்த நிலையில் போட்டியின் பின்னர் தமது தோல்வி குறித்து கருத்து தெரிவித்த இலங்கை அணித்தலைவர் மெத்தியூஸ், ‘ நாம் எமது முதல் போட்டியில் வெற்றி பெற்றோம். எனினும் பங்களாதேஷ் அணியுடனான போட்டியில் தோல்வியடைந்து விட்டோம். இந்த போட்டியில் இலங்கை அணியின் பாதை தவறிவிட்டது. நாம் எமது விக்கெட்கள் வீழ்வதை தடுத்திருக்க வேண்டும்.’ என தெரிவித்துள்ளார்.

மேலும் பங்களாதேஷ் அணியின் பந்து வீச்சு மற்றும் களத்தடுப்பு சிறப்பாக அமைந்துள்ளதாக தெரிவித்த மெத்தியூஸ், நேற்றைய தோல்வி அனைவருக்கும் சிறந்த அனுபவத்தை வழங்கியுள்ளது. இனிவரும் போட்டிகளில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளை நாம் எதிர்கொள்ள வேண்டியுள்ளது.

எனவே கடுமையான பயிற்சி எமக்கு தேவை. எமது சிறந்த விளையாட்டினை வெளிப்படுத்துவதற்கு நாம் முயற்சி செய்வோம் என தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY