ஹலீமின் கோரிக்கைக்கு ஜனாதிபதி சாதகமான பதில்

0
191

தேர்தலுக்காக முஸ்லிம்களின் சமய கடமைகள் பாதிக்­கப்­படக் கூடா­தெ­னவும் எதிர்­வரும் உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்­தலை முஸ்­லிம்­களின் புனித மாத­மான ரம­ழானில் நடாத்த வேண்டாம் எனவும் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன உத்­த­ர­விட்­டுள்ளார்.

மாகாண சபைகள் மற்றும் உள்­ளூ­ராட்சி அமைச்சர் பைசர் முஸ்­த­பா­வுக்கே ஜனா­தி­பதி இந்த உத்­த­ரவைப் பிறப்­பித்­துள்ளார்.

எதிர்­வரும் ஜூன் மாதம் முஸ்­லிம்­களின் புனித கட­மை­களில் ஒன்­றான நோன்பு நோற்கும் ரமழான் மாத­மா­கையால் அம்­மா­தத்தில் உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்­தலை நடாத்த வேண்டாம் எனவும் தேர்­தலை எதிர்­வரும் ஆகஸ்ட் மாதத்­துக்கும் பின்பு நடாத்­து­மாறும் முஸ்லிம் சமய விவ­கார மற்றும் தபால் சேவைகள் அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீம் ஜனா­தி­பதி, பிர­தமர் மற்றும் மாகாண சபைகள், உள்­ளூ­ராட்சி அமைச்சர் பைசர் முஸ்­தபா ஆகி­யோ­ரிடம் கடிதம் மூலம் கோரிக்கை விடுத்­தி­ருந்­தார்.

அமைச்சர் ஹலீமின் கோரிக்­கையை ஆராய்ந்த ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன மேற்­கு­றிப்­பிட்ட உத்­த­ர­வினைப் பிறப்­பித்­துள்ளார்.

உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்தல் ஜூனில் நடாத்­தப்­பட்டால் அதனால் முஸ்லிம் வாக்­கா­ளர்­களும் அபேட்­ச­கர்­களும் பாதிக்­கப்­ப­டு­வார்கள்.

முஸ்­லிம்­களின் இரவு நேர தராவீஹ் தொழுகை உட்­பட விசேட மத கிரி­யை­க­ளுக்கு இதனால் பாதிப்பு ஏற்­ப­டு­மெ­னவும் அமைச்சர் ஹலீம் ஜனா­தி­ப­திக்கு கடிதம் மூலம் தெரி­வித்­தி­ருந்தார்.

இது தொடர்பில் ‘விடி­வெள்ளி’ மாகாண சபைகள் மற்றும் உள்­ளூ­ராட்சி அமைச்சர் பைசர் முஸ்­த­பாவைத் தொடர்பு கொண்டு வின­வி­ய­போது, அவர் பின்­வ­ரு­மாறு தெரி­வித்தார், எதிர்­வரும் உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்தல் ஜூனில் நடாத்­தப்­ப­டு­வ­தற்கே திட்­ட­மி­டப்­பட்­டி­ருந்­தது. எல்லை நிர்­ணய முறைப்­பா­டு­களும் துரி­த­க­தியில் விசா­ரிக்­கப்­பட்டு வரு­கின்­றன.

எல்லை நிர்­ணய அறிக்­கையை ஏப்ரல் மாதத்தில் கைய­ளிப்­ப­தற்கு அதற்­கென நிய­மிக்­கப்­பட்ட குழு திட்­ட­மிட்­டுள்­ளது.

எதிர்­வரும் ஜூன் மாதம் முஸ்­லிம்­களின் புனித நோன்பு மாத­மா­கையால் ஜூனில் தேர்­தலை நடாத்­த­வேண்­டா­மென ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன என்னை வேண்­டி­யுள்ளார். அமைச்சர் ஹலீமும் ஜூனில் உள்ளூராட்சி தேர்தலை நடாத்த வேண்டாமென என்னைக் கேட்டுள்ளார்.

அதனால் எதிர்வரும் ஜூனில் உள்ளூராட்சி மன்ற தேர்தல் நடாத்தப்படமாட்டாது.

தாமதித்தே நடாத்தப்படும் என தெரிவித்தார்.

-Vidivelli-

LEAVE A REPLY