பாகிஸ்தான் கிரிக்கெட் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறும்: சோயிப் மாலிக் நம்பிக்கை

0
158

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி வீரர் சோயிப் மாலிக் டெலிவிஷனுக்கு அளித்த ஒரு பேட்டியில்,

‘ஆசிய கிண்ண 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்தியாவுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் தோல்வி கண்டது ஏமாற்றம் அளித்தது. அந்த ஆட்டத்தில் ஆடுகளத்தை சரியாக கணிக்காமல் அடித்து ஆடியதே தோல்விக்கு காரணமாகும். எஞ்சிய ஆட்டங்களில் வெற்றி பெற்று இறுதிப்போட்டியில் இந்தியாவுடன் மோத வேண்டும் என்பதே எங்கள் நோக்கமாகும். அதனை அடைய ஆர்வமாக இருக்கிறோம்’ என்று தெரிவித்துள்ளார்.

இதேபோல் பாகிஸ்தான் அணியின் தேர்வு குழு தலைவர் ஹரூன் ரஷீத் அளித்த பேட்டியில், ‘இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் தோல்வி கண்டதால் பாகிஸ்தான் அணியின் வாய்ப்பு முடிந்துவிடவில்லை. எஞ்சிய ஆட்டங்களில் வென்று இறுதிப்போட்டிக்கு தகுதி பெறுவதுடன், இறுதிப்போட்டியில் இந்தியாவை வீழ்த்தும் திறமை எங்கள் அணிக்கு இருக்கிறது’ என்று கூறியுள்ளார்.

LEAVE A REPLY