ஹிருணிகாவை எச்சரித்த மேல் நீதிமன்றம்!

0
162

நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திரவுக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் நேற்று (29) கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திர கொலை வழக்கு நேற்று விசாரணைக்கு எடுக்கப்பட்ட சந்தர்ப்பத்திலேயே நீதிமன்றம் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.

நீதிமன்ற மண்டபத்திற்குள் பிரவேசிக்கும் போது சிரம்தாழ்த்து மரியாதை செலுத்த வேண்டும் என்ற போதிலும் ஹிருணிகா அவ்வாறு மரியாதை செலுத்தவில்லை என்ற காரணத்திற்காகவே எச்சரிக்கப்பட்டுள்ளார்.

முதலில் எச்சரிக்கை விடுப்பதாகவும் இந்த தவறை மறுமுறை செய்தால், அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் நீதிமன்றம் அறிவித்துள்ளது.

LEAVE A REPLY