மஹிந்தவின் தோல்விக்கு பசில் ராஜபக்ஷவே காரணம்: எஸ்.பி திஸாநாயக்க

0
151

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தோல்விக்கு பிரதான காரணம் பசில் ராஜபக்ஷவாகும். தற்போது புதிய கட்சியின் பிரதான செயற்பாட்டாளராக அவர் செயற்படுவது எமக்கு மகிழ்ச்சியை தருகின்றது. அவர் மீதான சுதந்திரக் கட்சியினர் பெரும் அதிருப்தியுடனேயே உள்ளனர். இவரது பலவந்த போக்குகளே சுதந்திரக் கட்சியினுள் உட்பூசல் ஏற்படுவதற்கும் காரணமாக அமைந்தது என சமூக நலன்புரி அமைச்சர் எஸ்.பி திஸாநாயக்க தெரிவித்தார்.

வடக்கு முகாம்களில் இருந்தும் கூட சுதந்திரக் கட்சியின் தமிழர்களின் வாக்குகள் குறையவில்லை. எனினும் அதேபோன்று முஸ்லிம்களின் வாக்கு வங்கி 15 இலிருந்து நான்கு சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்தது.

இதற்கு யார் பொறுப்பு கூற வேண்டும். மஹிந்தவின் சகோதரா்களே பொறுப்பாளிகளாகும். மஹிந்த மீண்டும் கட்சியின் தலைமை பொறுப்பை ஏற்றால் வடக்கின் தமிழரினதோ அல்லது முஸ்லிம்களினதோ வாக்கு எமக்கு கிடைக்காது. தனி பெளத்த வாக்கினால் எம்மால் வெற்றிப்பெற முடியாது என்றும் அவர் குறிப்பிட்டார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில்  நேற்று  நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்..

LEAVE A REPLY