20 ஓவர் உலக கிண்ணத்தை வெஸ்ட் இண்டீஸ் வெல்ல வாய்ப்பு: அம்புரோஸ்

0
139

20 ஓவர் உலக கிண்ண கிரிக்கெட் போட்டி இந்தியாவில் வருகிற 8-ந் தேதி தொடங்குகிறது. இந்த போட்டியில் டேரன் சேமி தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணி கலந்து கொள்கிறது. அந்த அணியில் அதிரடி ஆட்டக்காரர் கெய்ல் உள்ளிட்ட முன்னணி வீரர்கள் இடம் பெற்றுள்ளனர்.

20 ஓவர் உலக கிண்ண போட்டி குறித்து வெஸ்ட் இண்டீஸ் அணியின் பந்து வீச்சு ஆலோசகர் அம்புரோஸ் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

வெஸ்ட் இண்டீஸ் அணியில் இடம் பிடித்துள்ள வீரர்களில் பாதிக்கு மேலானவர்களுக்கு உலகின் பல்வேறு இடங்களில் நடைபெறும் 20 ஓவர் லீக் போட்டியில் விளையாட கடும் கிராக்கி நிலவி வருகிறது. ஒவ்வொருவரும் ஒவ்வொரு நாட்டில் நடக்கும் லீக் போட்டியில் விளையாடி வருகிறார்கள். அப்படிப்பட்ட வீரர்கள் பலர் ஒரு அணியில் இணைந்து விளையாடுவது என்பது சிறப்பு வாய்ந்ததாகும்.

2012-ம் ஆண்டில் 20 ஓவர் உலக கிண்ணத்தை வென்றதுடன், தற்போது உலக தர வரிசையில் எங்கள் அணி 3-வது இடத்தில் இருந்து வருகிறது. சாமுவேல்ஸ், கெய்ல், ஆந்த்ரே ரஸ்செல் போன்ற அனுபவம் வாய்ந்த வீரர்கள் அணியில் இடம் பிடித்து இருப்பதால் வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஆட்டம் சிறப்பாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. சீனியர் வீரர்களை பின்பற்றி இளம் வீரர்களும் நல்ல ஆட்டத்தை அணிக்கு அளிப்பார்கள் என்று நினைக்கிறோம்.

பந்து வீச்சு பிரச்சினையை முழுமையாக சரி செய்யாததால் சுழற்பந்து வீச்சாளர் சுனில் நரின் அணியில் இருந்து விலகினார். இதேபோல் அதிரடி வீரர் பொல்லார்ட் முழங்காலில் ஏற்பட்ட காயம் குணமடையாததால் விலக நேரிட்டது. டெஸ்ட் போட்டியில் கவனம் செலுத்தும் பொருட்டு டேரன் பிராவோ அணியில் இருந்து ஒதுங்கும் முடிவை எடுத்துள்ளார். மற்றபடி அவர்களுக்கு வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியத்துடன் எந்தவித பிரச்சினையும் இல்லை.

இவ்வாறு அம்புரோஸ் கூறினார்.

LEAVE A REPLY