சமூக மதிப்பீட்டுக்கான அமைப்பின் பொதுச்சபைக் கூட்டமும், புதிய நிருவாகிகள் தெரிவும்

0
165

காத்தான்குடி சமூக மதிப்பீட்டுக்கான அமைப்பின் பொதுச்சபைக் கூட்டமும் புதிய நிர்வாகிகள் தெரிவும் 27 சனிக்கிழமை மாலை புதிய காத்தான்குடி 167பி கிராம சேவகர் பிரிவுக்கான பல நோக்குக் கட்டிடத்தில் நடைபெற்றது.

இதன்போது காத்தான்குடி மத்தியஸ்த சபையின் தவிசாளர் எம்.ஐ.எம்.உசனாரின் மேற்பார்வையின் கீழ் மேற்படி அமைப்பின் எதிர்வரும் மூன்று ஆண்டுகளுக்கான புதிய நிருவாகிகள் தெரிவு இடம்பெற்றது.

இதற்கமைவாக காத்தான்குடி சமூக மதிப்பீட்டுக்கான அமைப்பின் தலைவராக இல்மி அஹமட் லெப்பையும்,பொதுச் செயலாளராக எம்.ஐ.அப்துல் நஸாரும்,பொருளாளராக எம்.எம்.தாஹிரும்,உப தலைவர்களாக மௌலவி பைறூஸ் பலாஹியும் மற்றும், ஆசிரியர் சப்ரியும், இணைச் செயலாளராக கபூரும், உப செயலாளராக ஸாதிரும்,நிர்வாக உறுப்பினர்களாக மர்யம்பீவி,றயீஸா,பரீட்,அப்துல்லாஹ்,பௌசுல் அமீன்,இர்ஷாத் ஜமாலி,முஸம்மில்,முகைதீன் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டதோடு அமைப்பிற்கான ஆலோசகர்களாக மௌலவி மஸ்ஊத் அஹமத், ஹாஷிமி,மன்சூர்,அஸீஸ்,மௌலவி றிஸ்வான் மதனி ஆகியோரும் தெரிவு செய்யப்பட்டனர்.

இதே வேளை இவ் அமைப்பினது உறுப்பினர் மௌலவி எம்.எப்.எம். சாதிர்(ஜமாலி)மௌலவிப் பட்டம் பெற்றமைக்காகவும், நீண்ட காலமாக அமைப்பினது செயற்பாடுகளில் அர்ப்பணிப்போடு பணியாற்றி வருவதற்காகவும் அவரை பாராட்டி அவருக்கு அமைப்பினது தலைவர் இல்மி அஹமட் லெவ்வையினால் நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

இந் நிகழ்வில் தென் கிழக்கு பல்கலைகழகத்தின் விரிவுரையாளர் சீ எம்.எம். மன்சூர், மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பிராந்திய இணைப்பாளர் ஏ.சீ.ஏ.அஸீஸ்,மௌலவி மஸ்ஊத் அஹமட் (ஹாசிமி), சமூக மதிப்பீட்டுக்கான அமைப்பின் செயலாளர் எம்.ஐ.எம். நஸார் , அதன் உப தலைவர் பைறூஸ் (பலாஹி )உட்பட பள்ளிவாயல் தலைவர்கள், உலமாக்கள் ஊர் பிரமுகர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

குறித்த சமூக மதிப்பீட்டுக்கான அமைப்பு சமூகத்தில் நலிவுற்றோர் மற்றும் விஷேட தேவையுடையோருக்காக அர்ப்பணிப்புடன் செயலாற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

(பழுலுல்லாஹ் பர்ஹான்)

4fc6407f-0b13-4cac-8772-61be0e5968ee 6f713237-d113-452f-8e44-48ba825026c1 163c621c-c4fd-470f-85cf-7a81852d73ee 4743fce8-be6a-48c5-9004-d0c90cca750f c7e01f8b-85bf-4b8f-a55e-8901dc190808

LEAVE A REPLY