1.5 லட்சம் சிரியா குழந்தைகள் துருக்கியில் பிறந்துள்ளன: துணை பிரதமர் தகவல்

0
114

சிரியாவில் உள்நாட்டுப் போர் தொடங்கியதில் இருந்து இதுவரையில் 1.5 லட்சத்துக்கும் அதிகமான சிரியா குழந்தைகள் அண்டை நாடான துருக்கியில் பிறந்திருப்பதாக துருக்கி துணை பிரதமர் லுப்தி எல்வன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஜெனீவாவில் நடைபெற்று வரும் ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சில் தொடக்க கூட்டத்தில் துருக்கி துணை பிரதமர் எல்வன் பேசுகையில், “5 ஆண்டுக்கும் மேலாக சிரியாவில் நடைபெற்று வரும் உள்நாட்டு போர் காரணமாக மனிதாபிமான பேரழிவின் மிகப்பெரிய பகுதியை துருக்கி தன்னால் முடிந்த அளவுக்கு ஏற்றுள்ளது.

துருக்கியில் பிறக்கும் சிரியா குழந்தைகள் எண்ணிக்கை கிட்டத்தட்ட 1 லட்சத்து 52 ஆயிரமாக உள்ளது. எந்த அண்டைநாடுகளிலும் இல்லாத வகையில், 2.7 லட்சத்துக்கும் அதிகமான சிரிய அகதிகள் எங்கள் நாட்டில் உள்ளனர்” என்றார்.

சிரியாவில் பாதிக்கும் மேற்பட்ட மக்கள் வெளியேறிவிட்ட நிலையில் சர்வசேத சமுதாயம் அதனை எதிர்கொள்ள பெரிய அளவில் செய்யவில்லை என துருக்கி தொடர்ந்து கண்டனம் தெரிவித்துள்ளது. அந்த வகையில் இன்று, உலக நாடுகளுக்கு அழைப்பு விடுத்துள்ள துணை பிரதமர் எல்வனும், மேற்கத்திய நாடுகள் உள்ளிட்ட உலக நாடுகள் இந்த சுமையை பகிர்ந்துகொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார்.

LEAVE A REPLY