ஆசியக் கிண்ண டி20 கிரிக்கெட்: பாகிஸ்தான் வெற்றிக்கு 130 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது UAE

0
195

ஆசியக் கிண்ண டி20 கிரிக்கெட் தொடரில் இன்று மிர்புரில் நடைபெற்று வரும் ஆட்டத்தில் அம்ஜத் ஜாவேத் தலைமையிலான ஐக்கிய அரபு அமீரக அணியும், அப்ரிடி தலைமையிலான பாகிஸ்தான் அணியும் விளையாடி வருகின்றன. டாஸ் வென்ற அமீரக அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

துவக்க வீரர்கள் ரோகன் முஸ்தபா, முகமது கலீம் ஆகியோர் தலா ஒரு ரன்னில் அவுட் ஆகினர். முகமது சமீத் 5 ரன்களும், உஸ்மான் முஸ்தாக் 9 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். 41 ரன்களுக்குள் 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய அதேசமயம், 4-வது வீரராக களமிறங்கிய ஷாய்மன் அன்வர் அபாரமாக விளையாடி ஸ்கோரை உயர்த்தினார். குறிப்பாக அப்ரிடி, முகமது நவாஸ் ஆகியோரின் பந்துவீச்சை துவம்சம் செய்த அவர் 46 ரன்களில் அவுட் ஆனார்.

அவரைத்தொடர்ந்து முகமது உஸ்மான்-கேப்டன் அம்ஜத் ஜாவேத் ஜோடியும் பொறுப்புடன் விளையாடியது. முகமது உஸ்மான் 21 ரன்களில் விக்கெட்டை இழக்க, 20 ஓவர் முடிவில் அமீரகம் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 129 ரன்கள் எடுத்தது. அஜ்மத் ஜாவேத் 27 ரன்களுடனும், முகமது நவீத் 10 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். பாகிஸ்தான் தரப்பில் முகமது அமிர், முகமது இர்பான் ஆகியோர் தலா 2 விக்கெட் கைப்பற்றினர்.

இதையடுத்து 130 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் அணி களமிறங்குகிறது.

LEAVE A REPLY