அப்டிரியின் உருவபொம்மையை எரித்து கொந்தளிப்பு

0
303

ஆசியக்கிண்ண டி20 தொடரில் இந்தியாவிடம் பாகிஸ்தான் தோற்றதால் அந்நாட்டு ரசிகர்கள் பெரும் ஆத்திரம் அடைந்துள்ளனர்.
இந்தியா – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான டி20 கிரிக்கெட் போட்டி மிர்பூரில் நேற்று முன்தினம் நடந்தது.

கடைசியாக இவ்விரு அணிகளும் கடந்த ஆண்டு உலகக்கிண்ணப் போட்டியில் மோதியது.

ஒரு ஆண்டுக்கு பிறகு இரு அணிகளும் மோதியதால் பாகிஸ்தான் ரசிகர்கள் இப்போட்டியை காண மிகவும் ஆவலாக இருந்தனர்.

இந்நிலையில் இந்தப் போட்டியில் மோசமாக ஆடிய பாகிஸ்தான் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியாவிடம் தோற்றது.

போட்டிக்கு பிறகு பேசிய பாகிஸ்தான் அணித்தலைவர் அப்ரிடி, “இந்தியாவிடம் தோற்றது ஒன்றும் பெரிய விடயமல்ல” என்று கூறியது அந்நாட்டு ரசிகர்களை மேலும் கோபமடைய வைத்தது.

இதனால் நகரின் முக்கிய பல இடங்களில் ஒன்றுதிரண்ட ரசிகர்கள், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் மற்றும் வீரர்களுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.

தவிர பல இடங்களில் தொலைக்காட்சிப் பெட்டிகளை உடைத்தும், பாகிஸ்தான் அணியின் தலைவர் அப்ரிடிக்கு எதிராக கோஷங்களை எழுப்பியபடி அவரது உருவ பொம்மைகளைக் கொளுத்தியும் தங்களது கோபத்தை வெளிப்படுத்தினர்.

LEAVE A REPLY