பிரான்ஸில் ஆண்டுதோறும் 600 விவசாயிகள் தற்கொலை

0
148

பிரான்ஸ் நாட்டில் ஆண்டுதோறும் 600 விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வதாக ஆய்வறிக்கையில் அதிர்ச்சி தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

பிரான்ஸ் விவசாயிகளின் வேளாண் விளை பொருட்களுக்கு போதிய விலை கிடைப்பதில்லை என்று கூறப்படுகிறது. இதனால் பலர் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கின்றனர்.

அந்த வகையில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 600 விவசாயிகள் தற்கொலை செய்து கொள்கின்றனர் என்று ஆய்வறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

விவசாயிகள் பிரச்சினைகளுக்கு தீர்வு காணக் கோரி பிரான்ஸ் முழு வதும் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அதிபர் ஹொலாந்தே பாரீஸில் நேற்று வேளாண் கண்காட்சியைத் தொடங்கிவைத்தார். அந்த மையத் தின் முன்பு திரண்ட விவசாயிகள் அதிபருக்கு எதிராக கோஷமிட்டனர். அவர்களில் முக்கிய தலைவர்களை போலீஸார் கைது செய்தனர்.

அதிபர் ஹொலாந்தே கூறிய போது, விவசாயிகளின் பிரச்சினைக்கு தீர்வு காண அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என்று உறுதியளித்தார்.

LEAVE A REPLY