பாடசாலை மைதானத்தில் பாம்புகளும்,70 க்கு மேற்பட்ட பாம்பு முட்டைகளும் கண்டெடுப்பு

0
337

எம்பிலிபிட்டி, ஹெலஉடகந்த பகுதியில் உள்ள பாடசாலை மைதானத்தில் பாம்பு குட்டிகளும் சுமார் 70க்கும் மேற்பட்ட பாம்பு முட்டைகளும் மீட்கப்பட்டுள்ளன.

பாடசாலை மைதானத்தில் விளையாடிக்கொண்டிருந்த மாணவர்களால் மைதானத்தின் ஒரு பகுதியில் பாம்பு குட்டிகளும் பாம்பு முட்டைகளும் இருப்பது அவதானிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து மாணவர்கள், ஆசிரியர்கள் கவனத்திற்கு கொண்டு வந்ததன் பின்னர் ஆசிரியர்கள் பிரதேசவாசிகளுடன் இணைந்து பாம்பு முட்டைகளையும் பாம்பு குட்டிகளை கவமான மீட்டு வனவிலங்கு அதிகாரிகளிடம் கையளித்துள்ளனர்.

-VK-

LEAVE A REPLY