இருபது-20 போட்டியில் முதற்தடவையாக இரு பெண் நடுவர்கள்

0
171

இந்தியாவில் நடைபெறவுள்ள மகளிர் ஐ.சி.சி. உலகக் கிண்ண இருபது-20 போட்டித் தொடரில், பணியாற்ற முதற்தடவையாக இரு பெண் நடுவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஒரே சமயத்தில் நடைபெறும் ஆண்கள் மற்றும் மகளிர் உலகக் கிண்ண தொடருக்காக, மொத்தம் 31 பேர் அடங்கிய நடுவர்கள் குழுவை ஐ.சி.சி. அறிவித்துள்ளது. இதில் நியுசிலாந்தைச் சேர்ந்த கேத்தி கிராஸ், அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த கிளேர் போலோசாக் இருவர் மட்டுமே பெண்கள் ஆவர்.

கேத்தி கிராஸ் ஏற்கனவே நடந்த ஐ.சி.சி. மகளிர் உலக கிண்ண ஒருநாள் போட்டித் தொடர்களில் நடுவராக செயல்பட்ட அனுபவம் உள்ளவர். போலோசாக் முதல் முறையாக உலகக் கிண்ணத்தில் பணியாற்ற உள்ளார்.

உலகக் கிண்ண இருபது-20 இல் பெண் நடுவர்கள் பணியாற்றுவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY