சிரியா: மோதல் நிறுத்த உடன்பாட்டை மீறி சில தாக்குதல்கள்

0
167

சிரியாவில், நாடுதழுவிய ரீதியாக மோதல் நிறுத்த உடன்பாடு ஒன்று அமலுக்கு வந்திருந்த நிலையில், ஞாயிறன்று வடக்கு மாகாணமான அலப்போவின் பல பகுதிகளில், யுத்த விமானங்கள் தாக்குதல்களை நடத்தியுள்ளதாக, அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

எந்தக் குழுக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டன என்பது தெளிவில்லாமல் உள்ளது.

மோதல் நிறுத்த காலத்தில், தாம் இலக்கு வைத்துள்ள தீவிரவாதக் குழுக்கள் மீது குண்டுத் தாக்குதல்களை தொடருவோம் என, ரஷ்யா தெரிவித்திருந்தது. இருந்தபோதிலும், ரஷ்யா சனிக்கிழமை எந்தவொரு தாக்குதல்களையும் மேற்கொண்டிருக்கவில்லை.

சிரியாவில் ஆங்காங்கே மோதல்கள் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டாலும், ஏனைய பகுதிகளில் மோதல் நிறுத்தம் பெருமளவில் கடைப்பிடிக்கப்படுவதாக தெரியவருகிறது.

இதனிடையே முற்றுகைக்குள்ளான பகுதிகளில் உதவிப் பணிகளை வழங்க மனிதாபிமான நிறுவனங்கள் ஆயத்தமாகி வருகின்றன.

LEAVE A REPLY