ரமழானில் தேர்தல் வேண்டாம்: ஹலீம் கடிதம்

0
201

எதிர்­வரும் ஜூன் மாதம் முஸ்­லிம்­களின் புனித கட­மை­களில் ஒன்­றான நோன்பு நோற்கும் ரமழான் மாத­மா­கையால் அம்­மா­தத்தில் உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்­தலை நடாத்த வேண்­டா­மெ­னவும் தேர்­தலை எதிர்­வரும் ஆகஸ்ட் மாதத்­துக்குப் பின்பு நடாத்­து­மாறும் முஸ்லிம் சமய விவ­கார மற்றும் தபால், தபால் சேவைகள் அமைச்சர் எம்.எச்.ஏ ஹலீம் ஜனா­தி­பதி, பிர­தமர் மற்றும் மாகாண சபைகள் உள்­ளூ­ராட்சி அமைச்சர் என்­போ­ரிடம் கோரிக்கை விடுத்­துள்ளார்.

அமைச்சர் ஹலீம் இது­தொ­டர்­பாக ஜனா­தி­பதி, பிர­தமர் மற்றும் மாகா­ண­ச­பைகள் உள்­ளூ­ராட்சி அமைச்சர் ஆகி­யோ­ருக்கு கடி­தங்­க­ளையும் அனுப்­பி­வைத்­துள்ளார். குறிப்­பிட்ட கடி­தத்தில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது, ‘ எதிர்­வரும் உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்­தலை ஜூன் மாதத்தில் நடாத்­து­வ­தற்கு திட்­ட­மிட்­டப்­பட்­டுள்ள தாகவும் எல்லை நிர்­ண­யங்கள் தொடர்­பான விசா­ர­ணைகள் பூர­ணப்­ப­டுத்­தப்­பட்டு அறிக்கை ஏப்ரல் மாதம் சமர்­பிக்­கப்­ப­டு­மெ­னவும் அதனால் ஜூன் மாதத்தில் தேர்­தலை நடாத்த முடி­யு­மெ­னவும் மாகா­ண­ச­பைகள் மற்றும் உள்­ளூ­ராட்சி அமைச்சர் தெரி­வித்­துள்ளார்.

ஆனால் ஜூன் மாதம் முதலாம் வாரத்தில் முஸ்­லிம்­களின் புனித நோன்பு ஆரம்­ப­மா­கி­றது. ஜூன் மாதம் உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்தல் நடாத்­தப்­பட்டால் முஸ்லிம் வாக்­கா­ளர்­களும் முஸ்லிம் அபே­ட்ச­கர்­களும் பாதிக்­கப்­ப­டு­வார்கள்.

நோன்பு காலத்தில் முஸ்லிம் அபேட்­ச­கர்கள் தேர்தல் பிர­சார நட­வ­டிக்­கை­களில் ஈடு­பட முடி­யாத நிலை ஏற்­படும். முஸ்­லிம்கள் இரவு நேர தராவீஹ் தொழு­கையில் ஈடு­ப­டு­வ­துடன் இரவு நேர பிரார்த்­த­னைகள் நல் அமல்­க­ளிலும் ஈடு­ப­டு­வார்கள்.

இந்­தக்­கா­லத்தில் தேர்தல் நடாத்­தப்­ப­டு­வதால் அவர்கள் பாதிக்­கப்­ப­டு­வ­துடன் அவர்­க­ளது அமல்­க­ளுக்கும் இடை­யூ­றுகள் ஏற்­ப­டு­வ­தற்கு வாய்ப்­பாக அமையும்.

நோன்பு காலத்தில் தேர்தல் நடாத்­தப்­பட்டால் முஸ்­லிம்கள் தமது மார்க்கக் கட­மை­களில் முழு­தாக ஈடு­ப­ட­மு­டியாற் போகும். எனவே இக்காரணங்களை கவனத்திற் கொண்டு தேர்தலை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் அல்லது அதன் பிறகு நடாத்துவதற்கு ஏற்பாடுகளைச் செய்யுமாறு வேண்டிக் கொள்கிறேன்’ என்றுகேட்டுள்ளார்.

LEAVE A REPLY