விரைவில் ரவூப் ஹக்கீம், ரிஷாட் பதியூதினிடம் விசாரணை!

0
238

எதிர்வரும் இரு வாரங்களுக்குள் அமைச்சர் ரவூப் ஹக்கீம் மற்றும் ரிஷாட் பதியூதின் ஆகியோர் பாரிய ஊழல் மற்றும் மோசடிகள் குறித்து விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு அழைக்கப்படவுள்ளதாக தெரிய வந்துள்ளது.

கடந்த ஆட்சிக் காலத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் நிதி மோசடிகள் சில தொடர்பில் வாக்குமூலம் பெறவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக, ஆணைக்குழுவின் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

இரு அமைச்சர்கள் குறித்த விசாரணைகள் தற்போது பெரும்பாலும் நிறைவடைந்துள்ள நிலையில், இவர்களை விசாரணைக்கு அழைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், தற்போது வரை நிறைவடைந்துள்ள விசாரணைகள் குறித்த அறிக்கையை விரைவில், ஜனாதிபதியிடம் கையளிக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY