`பெருங்கோடீஸ்வரர்கள் வாழும் முதல் ஐந்து நகரங்கள்

0
233

உலகில், பெரும் எண்ணிக்கையிலான கோடீஸ்வரர்கள் அதிகம் வாழும் நகரம் என்ற பெருமையை, முதல் தடவையாக, சீனத் தலைநகர் பீஜிங்கில் பெற்றுள்ளது.

பீஜிங்கில் உள்ள பெருங்கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை 100 என ஆய்வு முடிவு ஒன்று கூறுகிறது.

கடந்த ஆண்டு முதலிடத்தில் இருந்த நியூயார்க் நகரை பின்னுக்கு தள்ளி, பீஜிங் பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளது.

இடண்டாம் இடத்தில் உள்ள நியூயார்க் நகரில், அந்த எண்ணிக்கை 95 ஆக உள்ளது. மூன்றாவது இடத்தில், மாஸ்கோ நகரமும், அதற்கு அடுத்ததாக ஹாங்காங், மற்றும் ஷாங்காய் நகரங்கள் ஆகியன உள்ளன.

உலகில் பெருங்கோடீஸ்வரர்கள் எங்கெல்லாம் வாழ்கிறார்கள் என்ற இந்த ஆண்டிற்கான ஆய்வு அறிக்கையை, சீனாவை தளமாக கொண்டியங்கும் ஹூருன் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

உலகில் அதிக அளவில் பெருங்கோடீஸ்வரர்கள் வாழும் நாடு என்ற பெருமையை சீனா பெற்றுள்ளதுடன், பட்டியலில் முதலிடத்தில் சீனத் தலைநகர் பீஜிங்கும் உள்ளது.

அதிகோடீஸ்வரர்களின் பட்டியலில், தம்மிடம் உள்ள செல்வத்தின் அடிப்படையில் முதல் 10 இடங்களை பிடித்துள்ளவர்களும் அமெரிக்கர்களே.

அதிகூடிய செல்வந்தர்கள் பெருமளவில் வாழும் நகரங்களின் பட்டியலில் மூன்றாவது இடம் மாஸ்கோவிற்கு. மாஸ்கோவில் வாழும் கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை 66.

கடந்த ஆண்டு, ரஷ்யாவின் பட்டியலில் இருந்த பெருங்கோடீஸ்வரர்களில் 13 பேரின் பெயர்கள், அந்த நாட்டின் பட்டியலில் இருந்து இந்த ஆண்டு நீக்கப்பட்டுள்ளது.

பட்டியல் தரவரிசைப்படுத்தலில் நான்காம் இடத்தை பிடித்துள்ளது ஹாங்காங் நகரம்.

அங்கு வாழும் பெருங்கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை 64.

சீனாவின் பொருளாதார நகரம் எனப் பெயர் பெற்றுள்ள ஷாங்ஹாயில் 50 பெருங்கோடீஸ்வரர்கள் வாழ்கின்றனர். இந்த நகரம் பட்டியலில் 5 ஆவது இடத்தை பிடித்துள்ளது.

LEAVE A REPLY