ஆசிய கிண்ண கிரிக்கெட்: பாகிஸ்தான்-UAE இன்று மோதல்

0
134

ஆசிய கிண்ண 20 ஓவர் கிரிக்கெட் தொடரில் இன்று (திங்கட்கிழமை) இரவு 7 மணிக்கு நடக்கும் 6-வது லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான்-ஐக்கிய அரபு அமீரக அணிகள் மோதுகின்றன.

தொடக்க ஆட்டத்தில் இந்தியாவிடம் 83 ரன்களில் சுருண்டு படுதோல்வி அடைந்த பாகிஸ்தான் அணி சரிவில் இருந்து எழுச்சி பெறும் உத்வேகத்துடன் இருக்கிறது. ஆடுகளம் வேகத்துக்கு கைகொடுப்பதால், பாகிஸ்தானின் வலுவான வேகப்பந்து வீச்சு தாக்குதலுக்கு சிறிய அணியான ஐக்கிய அரபு அமீரகம் ஈடுகொடுத்து ஆடுவது சந்தேகமே. இரண்டு தோல்விகளை சந்தித்துள்ள அமீரக அணி 20 ஓவர்களை முழுமையாக ஆடினாலே பெரிய விஷயமாக இருக்கும். இவ்விரு அணிகளும் சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட்டில் நேருக்கு நேர் சந்திப்பது இதுவே முதல் முறையாகும்.

LEAVE A REPLY