20 ஓவர் உலக கிண்ணத்தில் இந்தியாவை வீழ்த்துவது கடினம்: ஸ்மித்

0
98

20 ஓவர் உலக கிண்ண கிரிக்கெட் போட்டி மார்ச் 8-ந்தேதி முதல் ஏப்ரல் 3-ந்தேதி வரை இந்தியாவில் நடக்கிறது. இந்த போட்டிக்கு ஆயத்தமாகி வரும் ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவன் சுமித் நேற்று சிட்னியில் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

20 ஓவர் கிரிக்கெட் போட்டியை பொறுத்தவரை குறிப்பிட்ட நாள் சாதகமாக அமைந்தால் எந்த அணியும் அபாயகரமானதாக இருக்க முடியும். இதே போல் தனிப்பட்ட வீரர் ஆட்டத்தின் போக்கை நம்மிடம் இருந்து தட்டிப்பறித்து விட முடியும்.

இந்த உலக கிண்ணத்தில் இந்திய அணி சொந்த மண்ணில் விளையாடுவதால் அவர்களை வீழ்த்துவது மிகவும் கடினமாக இருக்கும். அவர்கள் சிறந்த அணியாக இருக்கிறார்கள். அதை எங்கள் நாட்டில் வைத்து 20 ஓவர் தொடரில் விளையாடிய போது பார்த்தோம். 20 ஓவர் உலக கோப்பையை மட்டும் நாங்கள் இதுவரை வென்றதில்லை. இந்த கோப்பையை கைப்பற்றினால் அது மிகச்சிறப்பு வாய்ந்ததாக இருக்கும். அது தான் எங்களது லட்சியம். இந்தியாவில் உள்ள சீதோஷ்ண நிலை கடினமாக இருக்கும் என்பதை அறிவோம். அதே சமயம் சாதிக்கும் முனைப்புடன் உள்ளோம்.

இவ்வாறு சுமித் கூறினார்.

LEAVE A REPLY