பங்களாதேஷிடம் தோற்றது இலங்கை

0
198

ஆசிய கிண்ணக் கிரிக்கெட் தொடரில் இலங்கை தனது இரண்டாவது போட்டியில் இன்று பங்களாதேஷூடன் விளையாடியது.

போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 147 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

மிர்பூரில் நடைபெறும் இந்தப் போட்டியில் லசித் மாலிங்கவுக்கு பதிலாக திசர பெரேரா இலங்கை அணியில் இணைக்கப்பட்டிருந்தார்.

மாலிங்க உபாதைக்குள்ளானதே இதற்குக் காரணம் என்பதுடன் அதன்படி ஏஞ்சலோ மெத்யூஸ் இலங்கை அணியை வழிநடத்துகிறார்.

முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த பங்களாதேஷ் 2 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்தது.

ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்கள் இருவருமே ஓட்டமின்றி ஆட்டமிழந்தனர்.

சபிர் ரஹ்மான் 80 ஓட்டங்களைப் பெற்று பங்களாதேஷ் அணியை வலுப்படுத்தினார்.

இலங்கை அணி சார்பில் சமீர 3 விக்கெட்டுக்களைக் கைப்பற்றினார்.

பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணியின் துடுப்பாட்ட வீரர்களால் வெற்றியிலக்கை அடைய முடியவில்லை. 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுக்களை இழந்து 124 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுக்கொண்டது. இதனால் 23 ஓட்டங்களால் தோல்வியடைந்தது.

இது பங்களாதேஷ் அணியின் இலங்கை அணிக்கு எதிரான முதலாவது டி20 வெற்றி என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY