ஆசிய கிண்ண 20 ஓவர் கிரிக்கெட்: இலங்கைக்கு 148 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது வங்காளதேசம்

0
97

ஆசிய கிண்ண 20 ஓவர் கிரிக்கெட் போட்டி வங்காள தேசத்தில் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காள தேசம், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய 5 நாடுகள் பங்கேற்றுள்ளன.

ஒவ்வொரு அணியும், மற்ற அணிகளுடன் தலா 1 முறை மோத வேண்டும். புள்ளிகள் அடிப்படையில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும்.

நேற்றுடன் 4 லீக் ஆட்டம் முடிந்து விட்டன. இந்தியா 4 புள்ளியுடன் முதல் இடத்திலும், இலங்கை, வங்காளதேசம் தலா 2 புள்ளியுடன் அதற்கு அடுத்த நிலையிலும் உள்ளன. பாகிஸ்தான்– வங்காளதேசம் புள்ளி எதுவும் பெறவில்லை.

இலங்கை– வங்காளதேசம் அணிகள் மோதுகி 5–வது லீக் ஆட்டம் இன்று நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற வங்காளதேசம் முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்து. இலங்கை அணியில் காயம் காரணமாக மலிங்கா விளையாடவில்லை.

வாங்காளதேசத்தின் தொடக்க ஆட்டகாரகள் முகமது மிதுனும், சவுமிய சர்க்காரும் ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தனர். மூன்றாவதாக களமிறங்கிய சப்பீர் ரகுமானும், ஆல்ரவுண்டர் அல் ஹசனும் அந்த அணியை சரிவில் இருந்து மீட்டனர். அதிரடியாக ஆடிய சப்பீர் 80 ரன்கல் குவித்தார். அல் ஹசன் 32 ரன்கள் எடுத்தார். இறுதியில் அந்த அணி 7 விக்கெட்களை இழந்து 147 ரன்களை குவித்தது.

148 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கை 8 ஓவரில் ஒரு விகெடை இழந்து 55 ரன்களுடன் விளையாடி வருகிறது.

LEAVE A REPLY