புல்மோட்டை நூருல் ஹுதா பெண்கள் அரபிக் கல்லூரி திறப்பு விழா

0
184

திருகோணமலை மாவட்டத்தின், புல்மோட்டை பிரதேசத்தில் முதலாவது நூருல் ஹுதா பெண்கள் அரபிக் கல்லூரி 2016.02.28ஆந்திகதி ஞாயிற்றுக்கிழமை (இன்று) பி.ப. 05.00 மணியளவவில் திறத்து வைக்கபட்டது.

இந்நிகழ்வானது மௌலானா செய்த் அப்துல்லாஹ் கோயா தங்கள் (அல்ஹசனி வல் ஹுசைனி) அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஆர்.எம். அன்வர் அவர்கள் கலந்து கொண்டு அரபுக் கல்லூரியின் பெயர்ப்பலகையினை திரை நீக்கம் செய்து வைத்தார்.

அத்தோடு  இக்கல்லூரிக்கு மாகாண சபை உறுப்பினர் ஆர்.எம். அன்வர் அவர்களின் பண்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதிக்கீட்டிலிருந்து தளபாடங்களும் (கதிரை) வழங்கி வைக்கப்பட்டன.

குறித்த இந்நிகழ்வுக்கு ஏனைய அதிதிகளாக புல்மோட்டை பெரிய ஜூம்ஆ பள்ளிவாயலின் தலைவர் கலீல்லெப்பை, புல்மோட்டை தள வைத்தியசாலையின் பொறுப்பதிகாரி வைத்தியர் சுதாகர், திருகோணமலை தள வைத்தியசாலையின் வைத்தியர் இர்ஷாத், புல்மோட்டை பொலீஸ் நிலைய பொறுப்பதிகாரி மற்றும் புல்மோட்டை பிரதேச பள்ளிவாசல்களின் நிர்வாக சபை உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

எம்.ரீ. ஹைதர் அலி

LEAVE A REPLY