பாகிஸ்தான் வீரர் முகமது அமிருக்கு விராட் கோலி மீண்டும் பாராட்டு

0
149

ஆசிய கிண்ண 20 ஓவர் கிரிக்கெட் போட்டி வருகிற 24-ம் தேதி முதல் மார்ச் 6-ம் தேதி வரை வங்காளதேசத்தில் நடக்கிறது.

நேற்று நடந்த லீக் போட்டியில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி 2–வது வெற்றியை பெற்றது.

சூதாட்டத்தில் ஈடுபட்டு சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலால் 5 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டு, மீண்டும் பாகிஸ்தான் அணியில் இடம் பிடித்துள்ள முகமது அமீரின் பந்து வீச்சு அபாராமாக இருந்தது.

அமீரின் பந்து வீச்சு குறித்து பேசிய கோலி “நேற்றைய போட்டியில் அமீர் பந்து வீசிய விதத்திற்காக அவரை பாராட்ட விரும்புகிறேன். நான் அவர் பந்து வீசிக் கொண்டிருக்கும் போதே அவரை பாராட்டினேன். அமீரின் அற்புதமான ஸ்பெல்லை விளையாடியதற்காக மகிழ்ச்சியடைகிறேன். அவர் உலகத் தரம் வாய்ந்த வீரர்.” என்று கூறியுள்ளார்.

சில நாட்களுக்கு முன்னதாக ’மீண்டும் சர்வதேச கிரிக்கெட்டில் முகமது அமீரை பார்க்க சந்தோஷமாக உள்ளது’ என்று விராட் கோலி கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்திய அணியின் கேப்டன் தோனி, யுவராஜ் ஆகியோரும் பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து விச்சாளார்களை பாராட்டியுள்ளனர்.

LEAVE A REPLY