நடுவரின் முடிவுக்கு எதிர்ப்பு: வீராட் கோலிக்கு அபராதம் விதித்தது ஐ.சி.சி.

0
280

நடுவரின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் வீராட் கோலிக்கு அபராதம் விதித்துள்ளது ஐ.சி.சி.

ஆசியக் கிண்ண  டி20 கிரிக்கெட் தொடரில், மிர்புரில் நேற்று நடந்த ஆட்டத்தில் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோதின. இந்த போட்டியில் இந்தியா 5 விக்கெட் இழப்பிற்கு 85 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்தியா தரப்பில் கோலி 51 பந்தில் 49 ரன்கள் குவித்தார்.

இந்த ஆட்டத்தின் போது நடுவரின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து நடத்தை விதிமுறைகளை மீறியதற்காக வீராட் கோலிக்கு போட்டி சம்பளத்தில் 30 சதவீதம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து ஐ.சி.சி. வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் ”மொகமது சமி பந்தில் கோலி எல்.பி.டபிள்.யூ. முறையில் அவுட் ஆனார். ஆனால் பந்து தனது பேட்டில் உரசிக்கொண்டு போனதாக நடுவரிடம் பேட்டை உயர்த்திக் காட்டினார் கோலி. மேலும் சில தகாத வார்த்தைகளையும் பயன்படுத்தியுள்ளார். இது ஐ.சி.சி.-யின் நடத்தை விதிமுறைகளுக்கு எதிரானது. தனது தவறை கோலி ஏற்றுக்கொண்டுள்ளார். எனவே அவருக்கு போட்டி சம்பளத்தில் 30 சதவீதம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY