நான்கு பிக்குகளும் ஒரே நேரத்தில் சிறைச்சாலை வைத்தியசாலையில்..

0
191

ஹோமாகம நீதிமன்ற வளவில் கலகம் விளைவித்த குற்றச்சாட்டின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருக்கும் நான்கு பிக்குகளும் ஒரே நேரத்தில் சுகவீனமுற்று வெலிக்கடை சிறைச்சாலை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.

சிஹல ராவய மற்றும் இராவணாபலய இயக்கங்களைச் சேர்ந்த கிரம தேவிந்த, பியகம சுசில, பிட்டிகல தம்மவினீத, மதவாகல தம்மசார ஆகிய நான்கு பிக்குகளுமே ஒரே நேரத்தில் சிறைச்சாலை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டிருக்கின்றனர்.

கடந்த 26ஆம் திகதி வெலிக்கடை சிறைச்சாலைக்கு அனுப்பப்பட்ட அவர்கள் நால்வரும் குறிப்பிட்ட வைத்திய அதிகாரி ஒருவரின் பரிந்துரையின்படி சிறைச்சாலை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டிருக்கின்றனர் எனவும், நால்வரும் ஒரே நேரத்தில் சுகவீனமுற்றது விசித்திரமாகத் தோன்றுவதாகவும் சிறைச்சாலை அதிகாரியொருவர் தெரிவித்தார்.

-ET-

LEAVE A REPLY