சிங்கப்பூர் சென்ற ஜனாதிபதி நாடு திரும்பினார்

0
168

சிங்கப்பூரிற்கு விஜயம் மேற்கொண்டிருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மீண்டும் நாடு திரும்பியுள்ளார். ஸ்ரீலங்கா ஏயார் லைன்ஸ் விமான சேவைக்கு சொந்தமான விமானத்தின் மூலம் நேற்றிரவு 9.30 அளவில் ஜனாதிபதி நாட்டை வந்தடைந்துள்ளார்.

சுகயீனமுற்று சிங்கப்பூர் மவுண்ட் எலிசபெத் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் அமைச்சர் ராஜித்த சேனாரத்னவை பார்வையிடுவதற்காகவே ஜனாதிபதி நேற்று அதிகாலை சிங்கப்பூர் நோக்கி பயணமாகியிருந்தார்.

இதேவேளை, ராஜித்த சேனாரத்னவை பார்வையிடுவதற்காக அமைச்சர் சரத் பொன்சேகாவும் நேற்றைய தினம் சிங்கப்பூர் நோக்கி பயணமாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY