கிரிமெடிய சந்திப் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் மூவர் காயம்

0
158

வீரகெடிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிரிமெடிய சந்திப் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் மூவர் காயமடைந்துள்ளனர்.

இன்று (28) முற்பகல் 10.00 மணியளவில் இடம்பெற்ற இந்த சம்பவத்தில், காயமடைந்தவர்கள், தங்காலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், இதன்போது வேனில் வந்த இருவர் மற்றும் மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவருமே காயமடைந்துள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

இதேவேளை, துப்பாக்கிதாரி ஹைபிரிட் வகையான காரில் வந்ததாக தெரியவந்துள்ளது எனவும், எனினும் அவர் யார் என இதுவரை தெரியவரவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன் சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறியுள்ளார்.

-AD-

LEAVE A REPLY