மீண்டும் ஓட்டமாவடி தேசிய பாடசாலையின் பழைய மாணவர் சங்கம் புத்துணர்ச்சியுடன் செயற்பட அடித்தளம்

0
241

1917ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட ஓட்டமாவடி தேசிய பாடசாலையானது வருகின்ற 2017ம் ஆண்டு தனது நூற்றாண்டு விழாவினை எதிர்நோக்கியுள்ள சந்தர்ப்பத்தில் பாடசாலையின் மிகப் பெரிய தூணாக இருக்க வேண்டிய பழைய மாணவர் சங்கமானது எதுவித செயற்பாடுகளும் இன்றி உறங்கிய நிலையில் இருந்தமையினை அவதானித்த பாடசாலையின் 1998ம் ஆண்டைய சாதாரன தர மாணவர்கள் தூரநோக்கு சிந்தனையுடனும், பாடசாலையின் எதிர்கால வளர்ச்சியினையும் கருத்தில் கொண்டு உடனடி முயற்சியில் இறங்கியமையினால் மீண்டும் ஓட்டமாவடி தேசிய பாடசாலையின் பழைய மாணவர் சங்கத்திற்கு வைத்தியம் பார்க்கப்பட்டு புத்துணர்ச்சியுடன் செயற்பட அடித்தளம் இடப்பட்டுள்ளது..

பல சிரமங்களுக்கு மத்தியில் அயராது செயற்பட்ட ஓட்டமாவடி தேசிய பாடசாலையின் 98ம் ஆண்டைய சாதாரனதர மாணவர்களின் குழுவானது பாடசாலையில் கல்வி கற்று வெளியேறி பிரதேசத்தில் வாழுகின்ற அனைத்து பழைய மாணவர்களுக்கும் கொடுக்கப்பட்ட அழைப்பிதலின் பலனாக எதிர்பார்க்கப்பட்ட தொகையினரையும் தாண்டி மிகக்கூடுதலான பழைய மாணவர்கள் 27.02.2017 சனிக்கிழமை பாடசாலையின் கேட்போர்கூடத்தில் அதிபர் எம்.எல்.ஏ. ஜுனைட் தலைமையில் இடம் பெற்ற ஒன்று கூடலில் பிரசன்னமாயிருந்தனை அவதானிக்க கூடியதாக இருந்தது.

இவ்வொன்று கூடலில் முக்கியமாக் நூற்றாண்டினை எதிர்நோக்கியுள்ள பாடசாலையில் இதுவரை காலமும் ஏனைய பாடசலைகளில் இயங்குவதை போன்று பழைய மாணவர் சங்கமானது செயற்படாமைக்கான காரணங்கள் அலசி ஆராயப்பட்டதுடன், சாதக, பாதக கருத்துக்களும் வருகை தந்திருந்த பாடசாலையின் பழைய மாணவர்களினால் முன்மொழியப்பட்டன. இந்நிலையில் பழைய மாணவர் சங்கமானது ஏன் இதுவரை காலம் செயற்படாமல் இருந்தது என்பதற்கான காரணங்களை விரிவாக விளக்கிய பாடசாலையின் அதிபர் எம்.எல்.ஏ. ஜுனைட் பாடசாலை எதிர் நோக்கியுள்ள நூற்றாண்டு விழாவினையும், பாடசாலையின் விளையாட்டு, கல்வி, வர்த்தகம், கலை, விஞ்ஞானம், கணிதம் போன்ற பிரிவுகளை மேலும் எதிர்காலத்தில் எவ்வாறு சிறந்த பெறுபேறுகளின் ஊடாக வளர்ச்சிபடியினை முன்னேற்றி செல்வது பற்றி விளக்கமாக உரையாற்றினார்.

அத்தோடு பழைய மாணவர் சங்கமானது புத்துணர்ச்சியுடன் இயங்குவதற்கு பாடசாலையின் பழைய மாணவர்கள் அனைவரையும் உள்வாங்கி செயற்படும் விதத்தில் பழைய மாணவர் சங்கத்தினை ஆரம்பிக்கும் முதற்கட்ட நடவடிக்கையாக 21 செயற்குழு உறுப்பினர்களை கொண்ட குழு ஒன்றினையும் ஸ்தாபித்தார். புதிதாக அதிபரினால் ஸ்தாபிக்கப்பட பழைய மாணர் சங்க செயற்குழு உறுப்பினர்களின் பெயர்கள் பின்வருமாறு……

01-தலைவர்.-எம்.எல்.ஏ.ஜுனைட் அதிபர்
02- ஐ.ரி.அஸ்மி (முன்னால் பிரதே சபை உறுப்பினர்)
03- எம்.எம்.றாசிக் (சட்டத்தரணி)
04- என்.எம்.அனஸ் (இலங்கை கடல் கடந்த நிருவாக சேவை)
05- எம்.எம்.நவாஸ் (ஆசிரியர்)
06- எஸ்.ஏ.எம்.றியாஸ் (உதவி திட்டமிடல் பணிப்பாளர்)
07- கே.எல்.எம்.இர்ஷாட்( முகாமையாளர் இலங்கை வங்கி)
08- எம்.பி.சுபைர் (வைத்தியசாலை)
09- ஏ.எம்.றிஸ்மின் (நிருவாக உத்தியோகத்தர்)
10- எம்.எம்.நெளஷாட் ( பொது சுகாதார பரிசோதகர்)
11- ஏ.எல்.நெளபல் ( பொது சுகாதார பரிசோதகர்)
12- எச்.எம்.எம்.நளீம் ( கல்விப் பணிமனை)
13- எம்.பி.எம்.முபாரக் (பிரதேச செயலகம்)
14- எம்.எஸ்.எம்.றிஸ்மின் (ஆசிரியர்)
15- எச்.எம்.எம்.இத்ரீஸ் ( டிஜிட்டல் வேய்)
16- எம்.எச்.எம்.நபீர் (கல்விப் பணிமனை)
17- எச்.எம்.பைரூஸ் 18- எம்.ஐ.எம்.சப்சாத்
19- எம்.சாஜஹான்
20- ஜனாப் றிலாகான்
21- எம்.ஏ.றிபாய்டீன்

அஹ்மத் இர்ஷாத்

LEAVE A REPLY