புல்மோட்டை முஸ்லிம் வித்தியாலயத்தின் முதலாவது இல்ல விளையாட்டுப்போட்டி

0
196

திருகோணமலை மாவட்டத்தின், புல்மோட்டை சதாம் நகர் முஸ்லிம் வித்தியாலயத்தின் முதலாவது இல்ல விளையாட்டு போட்டி அதிபர் கத்தாப் அவர்களின் தலைமையில் 27.02.2016ஆந்திகதி பி.ப.4.00 மணிக்கு பாடசாலை மைதானத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வுக்கு பிரதம கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஆர்.எம். அன்வர் அவர்களும், கௌரவ அதிதிகளாக புல்மோட்டை மத்திய கல்லூரியின் அதிபர் ரசாக் மற்றும் புல்மோட்டை பொலீஸ் நிலைய பொறுப்பதிகாரி அவர்களும் சிறப்பு அதிதியாக முன்னாள் குச்சவெளி பிரேச சபை தவிசாளர் ஏ.பி. முபாரக் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் உரையாற்றிய மாகாண சபை உறுப்பினர்,
இப்பாடசாலையில் நடைபெறும் சின்னஞ் சிறார்களின் முதலாவது இல்ல விளையாட்டுப் போட்டியில் கலந்து கொள்வதையிட்டு மிகவும் பெருமிதம் அடைவதோடு, இச்சின்னஞ் சிறார்களுடைய கல்வி விடயங்களில் பெற்றோர்கள், ஆசிரியர்கள் கூடுதல் கவனம் செலுத்தி இம்மாணவர்கள் அனைவரும் எதிர்காலத்தில் பல்துறை சார்ந்த இந்நாட்டின் மிகப்பெரிய சொத்துக்களாக உருவாக வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

இவ்இல்ல விளையாட்டுப் போட்டியில் பங்குபற்றிய மாணவ, மாணவிகளுக்கு பரிசில்களும் வழங்கட்டது.

எம்.ரீ. ஹைதர் அலி

8bcbbbb3-3925-4e85-99f1-58a53aa470c4 426f0a4f-d9b2-4b81-8568-74abe2ad1120 97894f8f-cc63-4343-806d-05160d791bbc a4d70b55-ef30-4689-9871-7af09fb34240 c8de70ef-c6cb-4e5a-be79-f36e5fc39911

LEAVE A REPLY