புல்மோட்டை மீனவர்களின் பிரச்சினைக்கு மாகாண சபை உறுப்பினர் அன்வரினால் தீர்வு

0
169

திருகோணமலை புல்மோட்டை பிரதேசத்தில் 400க்கும் மேற்பட்ட மீனவர்கள் வெளிமாவட்ட மீனவர்களின் வருகையை எதிர்த்து மூன்றாவது நாளாகவும் 2016.02.27ஆந்திகதியும் கவனஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

வெளிமாவட்ட மீனவர்கள் பருவ காலங்களில் புல்மோட்டைக்கு வருகை தந்து அதிநவீன கருவிகளைப் பயன்படுத்தி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதனால் இங்குள்ள மீனவர்கள் பாதிக்கப்ட்டு வருவதாகவும் அதனை நிறுத்தக் கோரியும் இவ்வார்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

குறித்த பிரச்சினை தொடர்பாக கடந்த 2016.02.18ஆந்திகதி குச்சவெளி பிரதேச செயலக அபிவிருத்தி குழு கூட்டத்தில் எதிர்வரும் 2016.02.29ஆந்திகதி திருகோணாமலை மாவட்ட செயலகத்தில் அரசாங்க அதிபர் தலைமையில் இடம்பெறவுள்ள மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் இறுதி தீர்மானம் எடுக்கும் வரைக்கும் எந்த வெளி மாவட்ட மீனவர்கள் வரக்கூடாது என்ற தீர்மானம் நிறைவேற்றபட்டது.

அதற்கமைவாக குச்சவெளி பிரதேசத்துக்கான பொலீஸ் அத்தியட்சகர் தலைமையில் 2016.02.27ஆந்திகதி புல்மோட்டை பொலீஸ் நிலையத்தில் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது. குறித்த சந்திப்பில் வெளி மாவட்ட மீனவர்களால் ஏற்படும் அசௌகரியம் குறித்த தெளிவான விளக்கம் அனைவராலும் எடுத்து கூறபட்டதோடு அதற்குரிய நடவடிக்கையினை மேற்கொள்வதாகவும் பொலிஸ் அத்தியட்சகர் தெரிவித்தார்.

குறித்த கலந்துரையாடலில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஆர்.எம். அன்வர், முன்னாள் குச்சவெளி பிரதேச சபையின் தவிசாளர் ஏ.பி. முபாரக், பிரதி தவிசாளர் ஏ.பி. தௌபீக் உறுப்பினர் பதுருதீன், புல்மோட்டை ஜம்மியத்துல் உலமா சபை, புல்மோட்டை மொஹிதீன் ஜும்ஆ பள்ளிவாசல் நிர்வாக சபை மற்றும் புல்மோட்டை பிரதேச மீனவ சங்கங்களும் கலந்துகொண்டனர்.

-எம்.ரீ. ஹைதர் அலி

LEAVE A REPLY