இளைஞர் காங்கிரஸ் தூது குழுவினர் மலேசியா விஜயம்

0
167

மலேசியாவின் ஆளும் கட்சியான UMNO வின் இளைஞர் பிரிவின் அழைப்பை ஏற்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் இளைஞர் காங்கிரஸ் தூது குழுவினர் 2016.02.28ஆந்திகதி இன்று கட்நாயக்கா சர்வதேச விமான நிலையத்திலிருந்து இன்று நள்ளிரவு 1.00 மணியளவில் மலேசியா நோக்கி பயணமாகினர்.

இக்குழுவில் 12பேர் அடங்களாக எம்நாட்டின் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் இளைஞர் காங்கிரஸ் தூதுக்குழுவினருக்கும் மலேசிய ஆளும் கட்சியான UMNO வின் இளைஞர் பிரிவு உறுப்பினர்களுக்குமான 5 நாள் செலயமர்வில் கலந்து கொள்ளவே இத்தூது குழுவினர் மலேசியா நோக்கி பயணமானர்.

இக்குழுவினர் தங்கி இருக்கும் 5 நாட்களும் மலேசியாவின் ஆட்சி முறைமைகள், மலேசியாவில் நடைபெறும் அபிவிருத்தி திட்டங்கள் மற்றும் எமது நாட்டின் முஸ்லிம்களுக்கான கட்சியான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசினை எதிர் காலத்தில் பரந்தளவில் மக்கள் மத்தியில் வளர்த்தெடுத்தல் போன்ற செயலமர்வுகளில் கலந்து கொள்ளவுள்ளனர்.

இத்தூதுக்குழுவில் மட்டக்களப்பு மாவட்டத்தினை பிரதிநிதித்துவப்படுத்தி கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் சிப்லி பாறுக் அவர்கள் சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

-ஹைதர் அலி-

LEAVE A REPLY