ஐ.எஸ். வெடிகுண்டுகளில் இந்திய உதிரி பாகங்கள்: ஆய்வில் அதிர்ச்சித் தகவல்

0
151

சுமார் 7 இந்திய நிறுவனங்களின் உதிரிபாகங்கள் ஐ.எஸ். வெடிகுண்டு மற்றும் இதர ஆயுதங்கள் தயாரிப்பில் பயன்படுத்தப்பட்டுள்ளது ஆய்வு மூலம் தெரியவந்துள்ளது. ஆனால் இந்திய நிறுவனங்கள் சார்பில் எந்த வித சட்ட விரோத நடவடிக்கைகளும் இல்லை என்று கூறப்பட்டுள்ளது.

ஐரோப்பிய யூனியன் நிதி ஆதரவின் கீழ் ‘போராட்ட ஆயுத ஆய்வு’ என்ற குழு சுமார் 20 மாதங்கள் நடத்திய ஆய்வில் இந்தத் தகவல் தெரிய வந்துள்ளது. ஆனால் இந்திய நிறுவனங்கள் சார்பில் சட்ட விரோத செயல்பாடுகள் எதுவும் இல்லை என்று இந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

‘இந்திய சட்டங்களின் படி டெட்டனேட்டர் உள்ளிட்ட பொருட்களை விற்கவோ, ஏற்றுமதி செய்யவோ உரிமம் பெற்றிருப்பது அவசியம். இந்த ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து உதிரி பாகங்களும் சட்டபூர்வமாக ஏற்றுமதி செய்யப்பட்டவையே’ என்கிறது இந்த ஆய்வு.

இந்திய நிறுவனங்கள் மட்டுமல்ல, அமெரிக்கா, பிரேசில், துருக்கி உட்பட 20 நாடுகளைச் சேர்ந்த 51 நிறுவனங்கள் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.

தற்போது ஐ.எஸ். தீவிரவாத அமைப்பு ஐ.இ.டி என்ற வெடிகுண்டுகளை ‘தொழிற்துறைப் போன்ற தோற்றத்தில்’ உற்பத்தி செய்கிறது. அதாவது தேவையான உதிரிபாகங்களுடன் உரங்கள் மற்றும் மொபைல் போன்களையும் ஐ.இ.டி. தயாரிப்பில் உதிரி பாகங்களாக பயன்படுத்துகிறது.

துருக்கியின் பங்கு:

ஐ.எஸ். உற்பத்தி செய்யும் ஐ.இ.டி வெடிகுண்டுகளுக்கு துருக்கியைச் சேர்ந்த 13 நிறுவனங்களே பெருமளவிலான உதிரிபாகங்களை சப்ளை செய்துள்ளது. உதிரிபாகங்கள் என்றால் ரசாயன மூலப்பொருள், கன்டெய்னர்கள், டெடனேட்டிங்க் கார்ட், கேபிள்கள் மற்றும் ஒயர்கள் ஆகியவையாகும்.

இந்த 13 துருக்கிய நிறுவனங்கள் இந்திய நிறுவனங்களிடமிருந்தும் சில பொருட்களை இறக்குமதி செய்துள்ளன.

“சோலார் இண்டஸ்ட்ரீஸ் இந்திய நிறுவனம் 27, பிப்ரவரி 2014-ல் டெடனேட்டின் கார்டை உற்பத்தி செய்து, துருக்கியைச் சேர்ந்த யெல்சி, அங்காராவுக்கு ஏற்றுமதி செய்துள்ளது. இதே போல் டிசம்பர் 2012-லும் இந்திய கல்ஃப் ஆயில் கார்ப்பரேஷன் துருக்கிய நிறுவனத்துக்கு சில பொருட்களை ஏற்றுமதி செய்துள்ளது. ஆனால் இந்திய உதிரிபாகங்கள் பல்வேறு இடைத்தரகர்கள் மூலம் ஐ.எஸ். கைக்குப் போய் சேர்ந்துள்ளது” என்று இந்த ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் இந்திய சோலார் நிறுவனத்தின் எந்த மண்டல அலுவலகத்திலிருந்து இது சென்றது என்பது தெரியவில்லை.

மேலும் இந்தியாவின் பிரிமியர் எக்ஸ்ப்ளோசிவ்ஸ் நிறுவனம் சிரியாவில் உள்ள தொழிற்சாலை ஒன்றுக்கு 2009 மற்றும் 2010ல் 60 லட்சம் மீட்டர்கள் டெட்டனேட்டிங் கார்டுகளை அனுப்பியுள்ளதும் இந்த அறிக்கையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து டிசம்பர் 2011-;ல் டெடனேட்டிங் கார்டுகளை பெற்ற மெக்கானிக்கல் கன்ஸ்ட்ரக்ச்ஷன் பேக்டரியை தடை செய்ய வேண்டிய பட்டியலில் ஐரோபிய யூனியன் சேர்த்தது.

கோபானேயில் ஐ.எஸ்.இடமிருந்து குர்திஷ் படைகள் டெட்டனேட்டர்களைக் கைப்பற்றியது. இது இந்திய நிறுவனமான இகானமிக் எக்ப்ளோசிவ்ஸ் உற்பத்தி செய்ததாகும்.

இந்த அறிக்கையினால் சிரியா, துருக்கி நாடுகளுக்குச் செல்லும் ஏற்றுமதிகள் கண்காணிப்புக்குள்ளாகும் என்று தெரிகிறது.

-TH-

LEAVE A REPLY