ஆடுகளத்தை கணிக்க தவறி விட்டோம்: அப்ரிடி

0
342

ஆசியக் கிண்ண டி20 கிரிக்கெட் போட்டியில் நேற்று விளையாடிய இந்திய அணி பாகிஸ்தானை வென்றது.

இதுகுறித்து பாகிஸ்தான் தலைவர் அப்ரிடி கூறுகையில், ‘நாங்கள் ஆடுகளத்தை கணித்து செயல்பட்டிருக்க வேண்டும். ஆடுகளத்தன்மைக்கு ஏற்ப எங்களது ஆட்டம் அமையவில்லை. முதல் 6 ஓவர்களுக்குள் 4-5விக்கெட்டுகளை இழக்கும் போது 140 ரன்களை எட்ட இயலாது. இந்த மாதிரி ஆடுகளத்தில் எப்படி பேட்டிங் செய்ய வேண்டும் என்பதற்கு விராட் கோலி உதாரணம்’ என்றார்.

இந்திய கேப்டன் டோனி கூறுகையில், ‘பாகிஸ்தானை 83 ரன்னில் கட்டுப்படுத்தியது சிறப்பான விஷயம். 100 அல்லது 110 ரன்கள் எடுத்திருந்தால் போட்டி சவாலாக இருந்திருக்கும். மிடில் ஓவர்கள் தான் முக்கியமானதாக இருந்தது. அதில் சீரான இடைவெளியில் நாங்கள் விக்கெட்டுகளை வீழ்த்தினோம். பீல்டிங்கிலும் நாங்கள் சிறப்பாக செயல்பட்டோம். ஒரு ரன்-அவுட் கூட, எதிராளியிடம் இருந்து ஆட்டத்தை நம் பக்கம் கொண்டு வந்து விடும்’ என்றார்.

ஆட்டநாயகன் கோலி கூறுகையில், ‘இங்கு பேட் செய்வது எளிதானது அல்ல. கடந்த ஆட்டத்தில் எனது பேட்டிங் ஏமாற்றம் அளித்தது. இதனால் நிலைத்து நின்று ஆட முடிவு செய்தேன். இந்த ஆடுகளத்துக்கு ஏற்ப மனரீதியாக நம்மை மாற்றிக்கொள்ள வேண்டியது அவசியம். அப்போது தான் நிதானமாக ஆட முடியும். முகமது அமீரின் பந்து வீச்சு அபாரமாக இருந்தது. அவர் பந்து வீசிய விதம் பாராட்டுக்குரியது. அவர் மேலும் சாதிக்க வாழ்த்துகள்’ என்றார்.

LEAVE A REPLY